Tuesday, 20 October 2026

நீறும் நெருப்பும்

 காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.  

- திருநீற்றுப் பதிகம் (திருஞானசம்பந்தர்)

ஒரு பெரும்பணி திட்டமிடப்படுவதன் உற்சாகத்தில் இருக்கிறேன். 

ஒரு கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களையும் முழுமையாக ஒன்றிணைக்க வேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிக்கு இயற்கையின் மகாநியதி உளத்துணையாக இருக்கும் என்னும் நம்பிக்கை உறுதியாக இருக்கிறது. 

விரிவாக சிந்திக்க வேண்டும். 

சாத்தியமான எல்லா வழிகளையும் பரிசீலிக்க வேண்டும். 

நமது முயற்சி இயற்கையைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது என்பதால் எல்லா விதத்திலும் எல்லாருக்கும் நலம் பயப்பது. 

நாம் முன்னேறிச் செல்வோம்.