Monday, 2 November 2026

இன்னொரு புன்னகை

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
 இவ்வுலகம் இல்லாகி யாங்கு 

இருவேறு உலகத்து இயல்பு திருக்குறளைப் போலவே ஹாஸ்யமான இன்னொரு குறள் இது. 

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை - இது மானுடர் அனைவராலும் ஏற்கப்படுவது. பொருள் இருப்பவர்களும் பொருள் இல்லாதவர்களும் பொருள் தேடுபவர்களும் அனைவரும் ஏற்கும் விஷயம் இது. 

பொருளை ஸ்தூலமாகக் காண முடியும். 

அருள் அவ்விதமாக ஸ்தூலமாகக் காண முடியாது. கண்ணுக்குத் தெரியாதது. கண்ணுக்குத் தெரியாதது என்பதாலேயே மானுடரால் எளிதில் உய்த்தறிய இயலாதது. 

பொருள் என்பதை மானிடர்கள் புரிந்து கொள்வார்கள். அது கண்ணுக்குத் தெரிகிறது என்பதால். அருளைப் புரிந்து கொள்வது பொருளைப் புரிந்து கொள்வது போல் எளிதல்ல. 

ஒரு கோடி மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒரு கோடி பேருக்கும் பொருள் என்றால் என்ன என்று தெரியும். 100 க்கு 100 தெரிந்த விஷயத்தைக் கூட 100க்கு 100 பேரும் அடைந்திடுவது இல்லை. பொருள் 100ல் 1 வருக்கோ 2 வருக்கோ வசப்படுகிறது. 

ஒரு கோடி மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒரு கோடி பேருக்கும் அருள் என்றால் என்ன என்று தெரியாது. ஒரு கோடி பேரில் ஒருவரோ இருவரோ அருள் பெற்றி பெறுகிறார்கள். 

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை. அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை. 

அவ்வுலகத்திற்கு ஒருவன் செல்லும் போது இவ்வுலகத்தில் அவன் பொருள் பெற்றிருந்தானா அல்லது பொருள் பெற்றிலாமல் இருந்தானா என்பதற்கு எந்த மதிப்பும் கிடையாது. அங்கே மதிப்பிடப்படுவது அருள்.