Saturday, 28 November 2026

அணைக்கரை - ஆனைக்காரன்சத்திரம்

இன்று காலை அணைக்கரை சென்றேன். அங்கிருந்து ஆனைக்காரன்சத்திரம் செல்ல வேண்டியிருந்தது. காட்டுமன்னார்குடி வழியாகப் பயணித்தேன். காட்டுமன்னார்குடியிலிருந்து சிதம்பரம் செல்ல புறவழிச்சாலை உள்ளது. எனினும் காட்டுமன்னார்குடி கடைவீதி மார்க்கமாக செல்ல நேரிட்டது. லால்பேட்டை சென்றதும் சிதம்பரத்துக்கு வலது பக்கமாக ஒரு சாலை பிரிந்தது. லால்பேட்டை வந்து வீர நாராயண ஏரிக்கரை வழியாகச் செல்லாமலா எனத் தோன்றி ஏரிக்கரை மீது பயணிக்க ஆரம்பித்தேன். ஏரி நிறைய நீர் இருக்கிறது. செல்லும் போது வலுவான மழை. மழையில் நனைந்தவாறு பயணித்தேன். நீர்நிலைகளுக்கும் வானுக்கும் இடையே முன்னோர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணம் ஏற்பட்டது. கந்தகுமாரன் வரை சென்று வலது பக்கம் திரும்பி நெடுஞ்சேரி வழியே சிதம்பரம் சென்றேன். அங்கிருந்து ஆனைக்காரன்சத்திரம். பின்னர் ஊர் திரும்பினேன்.