இன்று சி பி கி ராம் ஸ் இணையதளம் மூலம் தெற்கு ரயில்வே சமீபத்தில் நான் அளித்திருந்த புகாருக்கு பதில் அளித்திருந்தது. ரயில்வே சந்திப்பின் நடைமேடை 4ல் காலை 6.15க்கு நிற்கும் ரயில் சேலம் புறப்பட்டுச் சென்ற பின் அதே நடைமேடையில் வடக்குப் புறமாக நிற்கும் திருச்சிராப்பள்ளி ரயிலை நடைப்பாலத்துக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்துவது பயணிகளுக்கு உதவிகரமாக இருக்கும் எனக் கூறியிருந்தேன். ரயிலின் புறப்படும் நேரத்துக்கு 30 நிமிடம் முன்பே ரயில் இயக்கும் குழு ரயிலில் பொறுப்பெடுக்கும் என்றும் அப்போது பயணிகள் பலர் ரயில் ஏறுவதும் இறங்குவதுமாய் இருக்கும் நிலையில் இரயிலை இயக்குவது பயணிகள் நலனுக்கு உகந்தது அல்ல எனக் கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் பதில் எவராலும் ஏற்கக் கூடிய ஒன்றே.