Thursday, 5 February 2026

இரண்டும் ஒன்றும் ( நகைச்சுவைக் கட்டுரை)

நேற்று ‘’நிலமும் பொன்னும்’’ என ஒரு பதிவு எழுதி வெளியிட்டேன். 

சற்று நேரம் கழித்து அந்த தலைப்பைக் குறித்து யோசித்தேன். தனவணிகம் நில வணிகத்தை விட மேலானது என்னும் அவதானத்தை அந்த பதிவில் எழுதியிருந்தேன். இருப்பினும் அந்த பதிவுக்கு ‘’பொன்னும் நிலமும்’’ எனத் தலைப்பிடாமல் ‘’நிலமும் பொன்னும்’’ என தலைப்பிட்டிருந்தது ஏன் என யோசித்தேன். 

நிலத்தின் ஒரு சிறு துளி மட்டுமே பொன் என்பதால் அவ்வாறு எழுதினேனா என்று யோசித்தேன். புவி தன்னகத்தே கொண்டுள்ள உலோகத்தின் அளவு 100 கிலோ எனில் அதில் தங்கம் என்பது 1 கிராம் மட்டுமே. 

***

எனது நண்பர் ஒருவருக்கு 2014ம் ஆண்டு விவசாய நிலம் ஒன்றை ‘'A'' என்ற விலைக்கு வாங்கித் தந்தேன். இப்போது அதன் விலை ‘’4 A''. 2014ம் ஆண்டு தங்கத்தின் விலை ‘’A'' எனில் இப்போது தங்கத்தின் விலை ‘’5 A''. 

அவ்வாறெனில் தங்க விலைக்கு இணையாக விலை ஏறியிருக்கக் கூடிய நிலத்தை அவருக்கு நான் பரிந்துரைத்து வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நிலத்தின் விலையையும் தங்கத்தின் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்து இதனை அறிந்த போது இந்த விபரம் எனக்கு பெரு மகிழ்ச்சியை அளித்தது.