Wednesday, 11 March 2026

வேல்யுவேஷன் (நகைச்சுவைக் கட்டுரை)

 ரியல் எஸ்டேட் நண்பருடன் நேற்று உரையாடிக் கொண்டிருந்தேன். அவரது சொத்து ஒன்றை விற்க வேண்டும் என்று சொன்னார். சொத்தை விற்க விரும்பும் ‘’செல்லர்’’களிடம் கேட்பது போல அந்த சொத்தின் ஆவண நகல்களைக் கேட்டேன். அவரிடம் அவை 90 சதவீதம் இருந்தன. ஒரு சில சொத்து வரி ரசீதுகள் உடனடியாகத் தேடும் இடத்தில் இல்லை. தேடி எடுத்து வைக்கிறேன் என்றார். என்ன வேல்யூவேஷன் சொத்துக்கு என்பதை நோட் செய்து கொடுங்கள் என்றேன். ஒரு ரெஃபரன்ஸூக்காக என்னிடம் மட்டுமே இருக்கும் ; யாரிடமும் காட்ட மாட்டேன் என்றேன். இருவருமே ரியல் எஸ்டேட் என்பதால் இருவருக்குமே இது தெரியும் என்றாலும் ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பாக கூறினேன். அந்த இடத்தின் பரப்பு என்ன அந்த பகுதியில் காலிமனை சதுர அடி என்ன விலை போகிறது கட்டிடத்தின் பரப்பு என்ன கட்டிடத்துக்கு எவ்வளவு மதிப்பு உத்தேசிக்கிறார் என்பதைக் குறித்து இவற்றைக் கூட்டி மொத்த மதிப்பில் 70 சதவீதம் விலைக்குக் கேட்டால் கூட கொடுத்து விடுவோம் என்றார். சொத்தின் மதிப்பு 1.5 சி வந்தது. 1 சி க்கு யாரேனும் கேட்டால் கொடுத்து விடுவோம் என்றார். அது சரியான மதிப்பீடுதான். நான் அதனை இரண்டு மூன்று தடவை பார்த்தேன். அப்போது அவர் சொத்து வரி ரசீதை தேடச் சென்றார். அப்போது நான் ஒரு கணக்கீடு செய்து பார்த்தேன். அதாவது, அந்த சொத்தின் மதிப்பு 1.5. அவர் 33 சதவீதம் விலையைத் தள்ளி கொடுக்கிறேன் என்றார். காலிமனை மதிப்பு ஊரில் என்ன விலை சொல்லப்படுகிறதோ அதைத்தான் குறித்திருக்கிறார். அந்த கட்டிடம் கட்டி 10 ஆண்டுகள் ஆகின்றன. புதிய கட்டிடத்தின் கட்டுமானச் செலவில் கணிசமான சதவீதம் 10 ஆண்டு பழமைக்காகக் குறைத்திருந்தார். இருப்பினும் அதில் சற்று கறாராக மதிப்பிட்டால் மேலும் 10 எல் குறைக்க முடியும். அவ்வாறெனில் மொத்த மதிப்பீடு 1.4 சி. அதில் 33 சதவீதம் குறைத்தால் 93 எல் விற்பனை விலை என்றாகும். நண்பர் சொத்து வரி ரசீதுடன் வந்தவுடன் கட்டிடத்துக்கு 10 எல் வேல்யூவேஷன் அதிகமாக இருக்கிறதா அதைக் குறைத்து மொத்தத்தில் குறைக்கலாமா என்று கேட்டேன். நண்பர் டென்ஷன் ஆகி விட்டார். மொத்த மதிப்பு 1.5 சி ; நான் 1.1 வந்தால் தான் கொடுப்பேன் என்று கூறி இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்றார். ‘’ பையர் இப்படி ஒரு டிமாண்ட் வைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் தான் கேட்டேன். நோ இஸ்யூஸ். 1 சி க்கு மேலயே முடிச்சுடலாம்’’ என்றேன். நண்பர் அமைதியானார். அவர் சொத்து மதிப்பு மிக்க சொத்து. அதனை விற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.