Friday, 1 May 2026

இசை

 கொட்டிப் பரந்து கிடக்கிறது 
அண்டப் பெருவெளி
இறக்கங்களால் ஏற்றங்களால்
பள்ளங்களால் மேடுகளால்
ஆனது
இப்புவியின் மேல்பரப்பு
வடிவமின்மை புடவியின் இயல்பு
இந்த ஊழி வெளியில்
நீ
இருக்கும் பரப்பு
மிக அழகாகிறது
உன் இருப்பால்
உன் இயல்பால்