பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஒரு குடும்பம் வண்டியில் ஏறியது. தந்தையின் தோளில் ஓர் இளமைந்தன் சாய்ந்து கொண்டிருந்தான். தந்தை என்னருகில் அமர்ந்து கொண்டார். இளமகன் என்னை நோக்கி தன் கையை நீட்டினான். குழந்தைக்கு இன்னும் ஒரு வயது ஆகியிருக்காது. ஒரு வயதை நோக்கி மிக ஆர்வமாகச் சென்று கொண்டிருக்கிறான். என் கையை நீட்டினேன். என் விரல் ஒன்றை இறுக்கிப் பிடிக்க முயன்றான். அவனது உள்ளங்கை மிக மென்மையாக இருந்தது. அது இறைவனின் உள்ளங்கை என்பதை அக்கணம் உணர்ந்தேன்.