Wednesday, 30 September 2026

இனியவள்

மரணத்தின் தேவதை
இனியவள்
இனிமையானவள்
இனிமை அளிப்பவள்
மரணத்தின் தேவதையைக் கண்டு
அஞ்சுகின்றனது
அறியா மானுடம்
அனாதி காலமாய்
மரணத்தின் தேவதைக்கு
பேதமில்லை
எல்லா உயிர்களையும்
அணைத்துக் கொள்கிறாள்
எல்லா உயிர்ககளையும்
சமமாய்ப் பார்க்கிறாள் 
வானின் கீழ் வாழ்ந்திருப்பினும்
மனிதர்
புவியை நோக்கியே வாழ்கின்றனர்
மரணத்தின் தேவதை
உயிர்களை 
வான் நோக்கி 
கொண்டு செல்கிறாள்
மேகங்கள் இருக்கும் வான் நோக்கி
மேகங்களுக்கு அப்பால் இருக்கும் வான் நோக்கி
சூரியன் இருக்கும் வான் நோக்கி
மரணத்தின் தேவதை
இனியவள்
இனிமையானவள்
இனிமை அளிப்பவள்