Sunday, 20 September 2026

தணிக்கை

 வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு,

***** கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச்சட்டம் படி கோரப்பட்டிருந்த விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமத்தில் உள்ள மொத்த தெருவிளக்குகள் 337. ஏப்ரல் 1 லிருந்து ஜூலை 31 வரையான 120 நாளில் பழுதான தெருவிளக்குகள் 127 என தகவல் தரப்பட்டுள்ளது. முதற்பார்வைக்கு இந்த தகவல் உண்மையிலிருந்து மிகத் தொலைவானது என்பதை எவருக்கும் தெளிவாகத் தெரியும். இந்த விஷயத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஊராட்சிகளின் தணிக்கை அதிகாரி என்ற முறையில் இந்த விஷயத்தை தணிக்கை அல்லது மறுதணிக்கை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,

பிரபு