Sunday, 15 November 2026

பலகைப் பயிற்சி

 சில நாட்களாக ஒரு உடற்பயிற்சியை செய்து வருகிறேன். அதாவது, இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு முழங்கைகளாலும் காலின் பத்து விரல்களாலும் மட்டும் உடலின் எடையை ஒரு பலகையைப் போல் தாங்குவது. ஒரு நிமிடம் இவ்வாறு இருப்பது; பின்னர் ஒரு நிமிடம் இடைவெளி விட்டு மேலும் ஒரு நிமிடம். நாள் பொழுதில் 5 அல்லது 6 முறை செய்கிறேன். இந்தப் பயிற்சி உடலுக்குப் புத்துணர்வு தருகிறது. உடனடியாக மனமாற்றத்தை ஏற்படுத்துகிறது. உடலைக் காட்டிலும் மனவலிமைக்கு சிறந்த பயிற்சியாக உள்ளது.