Wednesday, 4 November 2026

லஞ்சத்தை நீக்க முயலும் அரசாங்கம்

ஓர் இந்தியக் குடிமகனாக அரசு நிர்வாகத்தில் லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என நான் எப்போதும் எண்ணுவேன். சாமானிய குடிமக்கள் தங்கள் அவசியத் தேவைகளுக்காக அரசை அணுகும் ரேஷன் அட்டை தொடர்பான குடிமைப் பொருள் வழங்கும் துறை, தங்கள் நிலவிற்பனையைப் பதிவு செய்யும் பத்திரப் பதிவுத் துறை, பட்டாவுக்கு விண்ணப்பிக்கும் வருவாய்த்துறை, வீடு கட்ட அனுமதி அளிக்கும் உள்ளாட்சித் துறை, தங்கள் மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் சாலைப் போக்குவரத்து துறை ஆகியவற்றில் லஞ்சம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என எண்ணுவேன். சாமானிய பொதுமக்கள் இந்த அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டிய அவசியம் அடிக்கடி இருக்கிறது. இங்கே லஞ்சம் கேட்கப்பட்டால் தினமும் அந்த அலுவலகங்களுக்குச் செல்லும் லட்சக்கணக்கான மக்கள் அரசமைப்பின் மீதும் ஜனநாயகத்தின் மீதுமே அவநம்பிக்கை கொள்ளும் சூழல் உருவாகிறது என்பதால் குறைந்தபட்சம் இந்தத் துறைகளிலாவது லஞ்சம் நீக்கப்பட வேண்டும் என நான் எண்ணுவேன். 

தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள் கடந்த 60 ஆண்டுகளில் மேலே குறிப்பிட்ட துறைகள் அனைத்திலும் லஞ்சத்தைக் கட்டவிழ்த்து விட்டன. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றில் கொள்ளை ஊழல்களை அரங்கேற்றிய திராவிடக் கட்சிகளின் அரசுகள் மேலே குறிப்பிட்ட துறைகள் மூலமும் லஞ்சம் பெற்றன ; தங்கள் ஊழல் வெளியில் தெரியாமல் இருக்க அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற முழுமையாக அனுமதித்தனர். 

தற்போது தமிழகத்தை ஆளும் அரசாங்கத்தில் ,  சாமானிய குடிமக்கள் தங்கள் அவசியத் தேவைகளுக்காக அரசை அணுகும் ரேஷன் அட்டை தொடர்பான குடிமைப் பொருள் வழங்கும் துறை, தங்கள் நிலவிற்பனையைப் பதிவு செய்யும் பத்திரப் பதிவுத் துறை, பட்டாவுக்கு விண்ணப்பிக்கும் வருவாய்த்துறை, வீடு கட்ட அனுமதி அளிக்கும் உள்ளாட்சித் துறை, தங்கள் மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் சாலைப் போக்குவரத்து துறை ஆகியவற்றின் ஊழியர்கள் லஞ்சம் பெற லஞ்சம் கேட்க தயங்குகிறார்கள் ; அவர்களிடம் அச்சம் நிலவுகிறது. லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் எவரேனும் புகார் அளித்து விட்டால் அரசாங்க மேலிடம் தங்களைப் பாதுகாக்குமா என்னும் ஐயம் இப்போது அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே இப்போது பொதுமக்களைக் கசக்கிப் பிழிந்து லஞ்சம் வாங்கும் போக்கு மட்டுப்பட்டிருக்கிறது. 

மாநில அரசாங்கம் சாமானிய பொதுமக்கள் லஞ்சத்தால் பாதிக்கப்படக் கூடாது என எண்ணுவதை உணர்ந்து தங்கள் அறியாமையை நீக்கிக் கொண்டு விழிப்புணர்வுடன் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டாலும் லஞ்சம் கொடுப்பதில்லை என்ற உறுதியுடன் இருப்பார்களேயானால் தமிழகத்தில் லஞ்சம் இல்லாமல் ஆகும். 

ஓரிரு நாட்கள் முன்னால் கட்டிட அனுமதி பெறுவதில் நிறைய புது வழிமுறைகளை மாநில அரசாங்கம் அறிவித்திருக்கிறது என்பதை அறிந்தேன். மிகவும் வரவேற்புக்குரிய விஷயமாகும் அது.