அனுப்புநர்
*****
****
***
பெறுநர்
தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
சென்னை
ஐயா,
பொருள் : மயிலாடுதுறை மாவட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
எதிரில் உள்ள குளம் தூர்க்கப்பட்டு சாலையாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்தவும் – குளத்தை
தூர்க்கும் நெடுஞ்சாலைத்துறை மீது நடவடிக்கை எடுக்கவும் – மனு
பார்வை : மயிலாடுதுறை மாவட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
எதிரில் உள்ள தூர்க்கப்படும் குளத்தின் ஒளிப்படம்
1.மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு
மிக அருகே தோராயமாக 200 அடி அகலமும் 200 அடி நீளமும் 10 அடி ஆழமும் கொண்ட குளம் அமைந்துள்ளது.
2.அந்தக் குளம் தோராயமாக ஒரு கோடி லிட்டர் நீரைச் சேமிக்கும்
தன்மை கொண்டது.
3.அந்தக் குளத்தை முழுமையாகத் தூர்த்து சாலை அமைக்க நெடுஞ்சாலைத்
துறை குளத்தை மண் கொட்டி மூடுதல், இரும்புக் கம்பிகளைக் கட்டமைத்தல், கான்கிரீட் பீம்களை
உருவாக்குதல் ஆகிய குளத்தினை தூர்க்கும் பணிகளைச் செய்து வருகிறது.
4.நீர் சேமிக்கும் குளம் ஒன்றைத் தூர்க்க அரசுத் துறைகளுக்கு
அதிகாரம் கிடையாது. மேற்படி குளம் சாலைப் பணிகளுக்காகத் தூர்க்கப்படுவதில் பசுமை விதிகள்
முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதும் குளம் தூர்க்கப்படுவது சட்டத்துக்குப் புறம்பாக
நடக்கிறதா என்பதும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
5.குளத்தினைத் தூர்க்க பணிகளைச் செய்து வரும் நெடுஞ்சாலைத்துறை
அதிகாரிகள் ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத்துறை
அதிகாரிகள் ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது பசுமை விதிகளின் படி அபராதம் விதிக்கப்பட வேண்டும்
என்றும் இந்த மனு மூலம் கோரப்படுகிறது.
6.மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு
மிக அருகில் இருக்கும் தூர்க்கப்படும் குளத்தைப் பாதுகாக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
7.தூர்க்கப்படும் குளத்தின் புகைப்படம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்
பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தங்கள் உண்மையுள்ள,
***
