எனது நண்பன் வாழ்வில் நடந்த சம்பவம் இது. எனது நண்பன் மொழியிலும்
கலையிலும் பேரார்வம் கொண்டவன். அவன் ஒரு துறவியைச் சந்தித்து அவரிடம் உரையாடியிருக்கிறான்.
துறவி தத்துவம் பயின்றவர். உலகின் மிகப் பெரிய முக்கியமான ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில்
தத்துவப் பேராசிரியராக இருப்பவர். உலகெங்கும் அவருக்கு மாணவர்கள் உண்டு. துறவி என்
நண்பனிடம் நீ என்ன படித்தாய் என்று கேட்டிருக்கிறார். நண்பன் மெக்கானிக்கல் பொறியியலில்
பி.ஈ பட்டம் பெற்றிருக்கிறான். அதன் பின் அதில்
எம்.டெக் பட்டமும் பெற்றான். தனது கல்வியைத் துறவியிடம் கூறியிருக்கிறான். ‘’ஓ! உனக்கு
மெக்கானிக்கல் பொறியியல் மிகவும் பிடித்த துறையா?’’ எனக் கேட்டிருக்கிறார். நண்பன்
‘’ இல்லை சுவாமி! எனக்கு மொழியிலும் கலைகளிலும் தான் ஆர்வம்’’ எனக் கூற சுவாமிஜி
‘’பின் ஏன் 6 ஆண்டுகள் பொறியியல் படித்தாய்?’’ எனக் கேட்டிருக்கிறார். ‘’நான் பொறியியல்
படிக்க வேண்டும் என்பது என் பெற்றோரின் ஆர்வம். பொறியியல் படித்தால் தான் நல்ல உத்யோகம்
கிடைக்கும் என அவர்கள் கருதுகிறார்கள்’’ என்பது நண்பனின் பதில். துறவி அவனிடம், ‘’ஐரோப்பாவுல
தொழிற்புரட்சி நடந்தது. அதன் விளைவா ஐரோப்பிய நாடுகள் உலகம் முழுக்க காலனி நாடுகளை
உருவாக்குனாங்க. அந்த நாட்டு மக்களை அடிமையாக்குனாங்க. ஏகாதிபத்யம் உருவானது. அதோட
விளைவா கடைசி 4 நூற்றாண்டா காலனி நாடுகளா இருந்த மக்களோட மனசுல இயந்திரங்களை உற்பத்தி
பண்ற – பெரிய அளவுல பண்ட உற்பத்தி செய்ய அனுகூலமா இருக்கற ‘’என்ஜினியரிங்’’ படிப்பு
மேல சாமானியர்களுக்கு பெரும் ஈர்ப்பு ஏற்பட்டுருச்சு. அந்த ஈர்ப்பு தான் சாமானிய மக்கள்
என்ஜினியரிங் படிப்பை ரொம்ப பெருசா நினைக்கக் காரணம்’’ எனக் கூறியிருக்கிறார். நானும்
நண்பனும் இந்த உரையாடலை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் நினைவு கூர்ந்து பெரிதாக சிரிப்போம்.
நண்பன் சொல்வான். ‘’என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வரலாறு தெரியாது. தொழிற்புரட்சின்னா
என்னன்னு தெரியாது. காலனி ஆதிக்கம் ஏகாதிபத்யம் எதுவும் தெரியாது. இது எதுவுமே தெரியலன்னாலும்
என்னை என் விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்காம என்ஜினியரிங் சேர்க்கணும்னு மட்டும் தெரிஞ்சுருக்கு’’
என்பான். மேலும் ‘’ நான் என்ஜினியரிங் சேர்ந்ததுல மானுட குலத்தோட 400 ஆண்டு கால வரலாறு
இருக்கு’’ என்பான். நகைச்சுவை என்றாலும் பொதுவான தமிழகச் சூழல் இதுவே. கடந்த 40 ஆண்டுகளில்
தமிழ்ச் சமூகத்துக்கு காமர்ஸ் என்னும் வணிகம் பயின்றவர்களும், சி ஏ என்னும் பட்டயக்
கணக்காளர்களும் தோட்டக்கலை படித்தவர்களும் வனவியல் படித்தவர்களும் தேவை. இருப்பினும்
அவற்றைப் பயில்பவர்களின் எண்ணிக்கை தேவைக்கு குறைவாகவே உள்ளது.
நேற்று நண்பர் ஒருவரிடம் தமிழ்ச் சமூகத்தில் ‘’சமயக் கல்வி’’
இருக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் ‘’நான் இளமைப் பருவத்திலிருந்தே எந்த விதமான
சமயச் சடங்கிலும் ஈடுபட்டதில்லை. அவற்றுடன் விலக்கத்துடனேயே இருந்திருக்கிறேன். இப்போதும்
அப்படித்தான் இருக்கிறேன். சமயக் கல்வி என்பது தேவை இல்லாதது’’ என்றார். ‘’சடங்குகளில்
ஈடுபாடு காட்டுவதோ அவற்றிலிருந்து விலகி இருப்பதோ அவரவர் விருப்பம் சார்ந்தது. ஒருவருக்கு
அவரது சமயம் குறித்து குறைந்தபட்சமேனும் தெரிந்திருக்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச
சமயக் கல்வி தேவை’’ என்றேன். ’’சமயக் கல்வியால சமூகத்துக்கு என்ன உபயோகம்?’’ என்றார்.
‘’நம்ம ஊர்ல நம்ம மாவட்டத்துல நம்ம மாநிலத்துல நம்ம நாட்டுல ஆபிரகாமிய மதங்கள் தீவிரமா
மதமாற்றம் பண்ணுது. மதமாற்றத்துக்கு அவங்க பயன்படுத்துற வழிமுறை மதக்கல்வி. அதுக்கு
அவங்களோட மதநூலை கருவியா பயன்படுத்தறாங்க. எங்க மதத்துல சேருங்க. எங்களோட மதநூலை உங்களுக்குத்
தரோம். மதநூலை போதிக்கறோம். இங்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. இப்படி சொல்றாங்க.
கடந்த ஆயிரம் வருஷமா ஆபிரகாமிய மதங்கள் உலகத்துல கொன்னு தீத்துருக்கற மனுஷங்களோட எண்ணிக்கை
கணக்குல அடங்காது. கத்தோலிக்க திருச்சபை ஐரோப்பிய நாடுகள் காலனி நாடுகள்ல இருந்த மனிதர்களை
– ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் – கால்நடை விலங்குகளை விக்கற மாதிரி வாங்கி
வித்து வணிகம் செஞ்சத சரியான செயல்னு ஆதரிச்சது. இப்ப உள்ள போப்பாண்டவர் கத்தோலிக்க
சர்ச் அடிமை வர்த்தகத்தை ஆதரிச்சது தப்புன்னு உலக மக்கள் முன்னால மன்னிப்பு கேட்டிருக்காரு.
மனுஷங்களோட வறுமையை தங்களுக்கு சாதகமா தங்களோட சுயலாபத்துக்கு பயன்படுத்துனவங்க இன்னைக்கு
நம்ம ஊர்ல நம்ம கூட இருக்கறவங்க கிட்ட உங்க மதத்துல சம உரிமை இல்லை ; நாங்க சமமா நடத்தறோம்னு
சொல்றாங்க. சமூகத்துல 100 பேர் இருந்தா நாம 80 பேர் இருக்கோம். ஆபிரகாமிய மதங்கள்ல
உள்ளவங்க 20 பேர் இருக்காங்க. 25 வருஷம் முன்னாடி இந்த எண்ணிக்கை 85-15ன்னு இருந்தது.
இப்ப 80-20ன்னு இருக்கு. நாளைக்கு 75-25ன்னு கூட ஆக வாய்ப்பிருக்கு. ஆபிரகாமிய மதங்கள்
மதங்கள் மட்டும் கிடையாது. அவங்க ஒரு அரசாங்கம். உலகத்தோட பல நாடுகளோட அரசாங்கத்தை
விட பவர் ஃபுல் ஆனது கத்தோலிக்க திருச்சபை. இங்க நடக்கற ஆபிரகாமிய மதமாற்றம் நம்ம மக்கள்
மேலே நம்ம சமூகம் மேல நம்ம பண்பாடு மேல தொடுக்கப்படற நேரடியான யுத்தம்.’’ என்றேன்.
நண்பர் இந்த விஷயத்துக்குள் இத்தனை உள்மடிப்புகள் இருக்கும் என அப்போதுதான் அறிந்தார்.
***
பாரத நிலத்தில் பிறந்த ஒருவருக்கு சமயக் கல்வி அளிப்பது கட்டாயமா?
பாரத நிலத்தில் பிறந்த ஒருவர் தன் குடும்பச் சூழல் மூலம் சமூகச் சூழல் மூலம் இயல்பாகவே
சமயக் கல்வி பெறுகிறார். பாரத நிலத்தில் பிறந்த குழந்தைக்குத் தன் அன்னை தெய்வத்தின்
உருவம் என்பது உணர்த்தப்படுகிறது. வீட்டின் பெரியவர்கள் வணங்கத்தக்கவர்கள் என்பதும்
உலகில் உயிர்கள் வாழ உதவும் சூரியனும் நீரும் கனியும் மரமும் தானியமும் இறைவடிவங்கள்
என்பது உணர்த்தப்படுகிறது. மொத்த பிரபஞ்சமும் மொத்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே இறைமையின்
வெவ்வேறு வடிவங்கள் என்பதை பாரத நிலத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஊசிமுனையளவேனும் அறிகிறார்கள்
; உணர்கிறார்கள்.
நம் மண்ணில் நம் நாட்டில் நாம் பண்பாட்டுக் கல்வியை மேலும்
கொஞ்சம் குறைந்தபட்சமேனும் கொண்டு சேர்க்க விழைவதன் காரணம் நமக்கு உலகில் நம் நிலத்தை
நம் நாட்டை அமைதி கொண்டதாக எல்லா உயிர்களுக்கும் இடம் கொடுப்பதாக இயற்கை தன் இயல்பில்
இருப்பதாக பராமரிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நம்மைப் பார்த்து மொத்த உலகமும்
தன் பொறுப்பை உணர வேண்டும் என்னும் வகையில் நம் அறிவும் நம் செயல்பாடுகளும் இருக்க
வேண்டும்.
மத பயங்கரவாதத்தால் ஐரோபாவில் பாரீஸ் பற்றி எரிந்ததையும்
லண்டன் பற்றி எரிந்ததையும் சமீப காலங்களில் கண்டோம். ஆபிரகாமிய மதங்களின் மதமாற்றம்
நம் நாட்டில் கூடிக் கொண்டே போனால் நம் நிலை மிக அபாயமான நிலைக்குப் போகும். நம் கடந்த
1000 ஆண்டு கால வரலாறு என்பது நாம் ஆபிரகாமிய மதங்களுடன் போரிட்ட வரலாறே. மதமாற்றம்
வழியாக இன்னும் அந்தப் போர் தொடர்கிறது.
***
இன்றைய காலகட்டத்தில் நம் சமூகத்தின் சமயக் கல்வியாக எவை
விளங்கக் கூடும்?
1. பாரத
நிலத்தில் சமயக் கல்வியும் பண்பாட்டுக் கல்வியும் இணை கோடுகளாக பயணிப்பவையே. மிகச்
சிறு வேற்றுமைகள் மட்டுமே உண்டு.
2. ஒரு
ஊரில் விளையாட்டு மைதானம் ஒன்று நிறுவப் பெற்று குழந்தைகளுக்கு விளையாட்டுகள் கற்றுத்
தரப்பட்டால் அதுவும் நம் நாட்டின் சமயக் கல்வியே.
3. ஒரு
ஊரில் ‘’களறிப்பயட்டு’’ போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டால் அதுவும் சமயக் கல்வியே
4. ஒரு
ஊரில் சங்கீதம் சங்கீத வாத்தியங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டால் அதுவும்
சமயக்கல்வியே
5. பண்ணிசையுடன்
தேவாரம் பாட குழந்தைகளுக்கு ஊரில் ஒரு பாடசாலையில் சொல்லிக் கொடுக்கப்பட்டால் அதுவும்
சமயக்கல்வியே.
6. கைவினைப்
பொருட்கள் செய்ய பயிற்சி தரப்பட்டால் அதுவும் சமயக்கல்வியே.
7. இலக்கியமும்
சிற்பமும் ஓவியமும் பயிற்றுவிக்கப்படுவது சமயக் கல்வியே ; பண்பாட்டுக் கல்வியே.
8. மானுட
ஞானத்துக்கு பங்களிப்பாற்றும் ஒவ்வொன்றும் சமயக் கல்வி மற்றும் பண்பாட்டுக் கல்வியே.