ரயில்வே துறையிலிருந்து ஃபோன் வந்தது. ரயில் நிலைய பார்க்கிங் ஒப்பந்ததாரர் எச்சரிக்கப்பட்டிருப்பதாகவும் இனி பிழை நிகழாது என்றும் கூறினர். சி பி கி ராம் ஸ் லும் பதில் அளித்திருந்தனர். சி பி கி ராம் ஸ் பதிலில் நிகழ்ந்த பிழையை ரயில்வே ஒப்புக் கொண்டுள்ளது. அதையே முதன்மை ஆவணமாகக் கொண்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இதை தனிப்பட்ட பிரச்சனையாக அல்லாமல் பொது பிரச்சனையாகவும் அணுக வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைக்க உள்ளேன்.