வானத்து மீன்களாய்
சிமிட்டிக் கொண்டிருக்கின்றன
தினமும்
தொலைவில்
தொடர்ந்து
அன்பின் நினைவுகள்
வானத்தின் முகில்கள்
பிரத்யேகமான
தங்களுக்கு சாத்தியமான
பயணங்களில்
ஈடுபட்டிருக்கின்றன
அன்பு வானம்
அவ்வளவு பெரிய
அவ்வளவு பரந்த
அவ்வளவு முற்றறிய இயலாத
வானத்தை
பூமியிலிருந்து
நோக்குகின்றன
அன்பின் கண்கள்