Friday, 9 October 2026

ஜனநாயகமும் அரசும் சமூகமும் குடிமக்களும்

நம் நாட்டில் அரசு ஊழியர்கள் தோராயமாக எத்தனை பேர் இருப்பார்கள்? 

இரண்டு கோடி பேர் இருப்பார்கள்

நம் நாட்டில் ஓய்வூதியம் பெறுபவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? 

இரண்டு கோடி பேர் இருப்பார்கள் 

நம் நாட்டில் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் எத்தனை பேர்?

810 பேர்

நம் நாட்டில் முன்னாள் மக்களவை மாநிலங்களை உறுப்பினர்கள் எத்தனை பேர்?

6000 பேர்

நம் நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர்?

5000 பேர் 

நம் நாட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர்?

40,000 பேர் 

மேற்படி வகையில் அரசின் வருமானத்திலிருந்து ஊதியம் பெறுபவர்கள் எத்தனை பேர்?

தோராயமாக 4 கோடியே 1 லட்சம் பேர் இருக்கிறார்கள். 

ஆண்டொன்றுக்கு இவர்களுக்கு அரசு வழங்கும் ஊதியம் எவ்வளவு?

தோராயமாக 13 லட்சம் கோடி இவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. 

***

ஜனநாயக அரசமைப்பில் அரசின் வருவாயில் அரசு ஊழியர்களே அரசின் வருவாயில் பெருமளவு பங்கைப் பெறுபவர்கள். அது இயல்பானது. எனினும் ஜனநாயக அரசமைப்பின் குடிமக்கள் அதனை அறிந்திருக்க வேண்டும். நாட்டின் அரசியலில் இந்த விஷயம் மிகவும் முக்கியமானது. 

ஜனநாயக அரசு நாட்டின் பொருளியல் வளர்ச்சி குறித்து திட்டமிட வேண்டும் ; நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு வழிகோல வேண்டும். 

எனினும் பெரும்பாலும் அரசியல்வாதிகள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது குறித்தும் அரசு ஊழியர்கள் குறைவான பணி செய்து அதிகமான ஊதியம் பெறுவது குறித்தும் மட்டுமே அக்கறை கொள்கின்றனர் என்பது சாதாரணமாகவே காணக் கிடைக்கும் காட்சி. 

பல்வேறு ஆட்சி முறைகளை ஒப்பிடுகையில் ஜனநாயகம் சிறந்த ஒன்று எனினும் அதில் குடிமக்கள் பங்களிப்பு அதிக அளவிலும் குடிமக்கள் அரசின் இயக்கத்தைக் கண்காணிக்கும் வகையிலும் இருந்தால் மட்டுமே ஜன்நாயகத்தின் பயன் சாமானியக் குடிமக்களைச் சென்று சேரும்.