ஒரு கனவான். மிகவும் நாசுக்கானவர். இது அவருடைய ஒரு இயல்பு. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சில அற்பத்தனங்களைச் செய்கிறார். அவர் வீணை வாசிக்கக் கூடியவர். அவரது விரல்கள் வீணை மூலம் நிகழ்த்தும் அற்புதத்தை கண்ட ஒருவர் அந்த கரங்களா அற்பத்தனம் நிகழ்த்தின என துணுக்குறுகிறார். எதிர்பாரா சிறு விபத்து அவர் விரல்களை நசுக்கி விடுகிறது. தி.ஜா வின் விரல் சிறுகதை ஒரு கனவானின் ஒளி மிக்க பக்கத்தையும் இருள் கப்பியிருக்கும் பகுதியையும் அடையாளம் காட்டிச் செல்கிறது.
Monday, 27 January 2025
Sunday, 26 January 2025
இவனும் அவனும் நானும்
காம குரோத மோகம் லோபம் மதம் மாச்சர்யம் என்பது மனித மனத்தின் ஆறு ப்கைவர்கள். எனினும் மனித மனம் அவற்றை பகையென்று எண்ணி விலகி நின்றிருப்பதில்லை. அவை உட்பகைவர்கள். உடனிருந்தே அழிப்பவை. அவற்றுடன் நேரடியாகப் போராடுவதை விட அவற்றை விலக்கி வைப்பதே பாதுகாப்பான அணுகுமுறை. மனித மனம் அந்த ஆறு பகைவர்களுடனும் எப்போதும் விஷப் பரீட்சை செய்து கொண்டேயிருக்கிறது. அந்த விஷப்பரீட்சை குறித்த கதை தி.ஜா வின் ‘’இவனும் அவனும் நானும்’’.
ஒரு விசாரணை
நவரசங்களை வெளிப்படுத்தி நாடகம் போடும் ஒரு கோஷ்டி. அந்த கோஷ்டியில் இருவர் காதலிக்கின்றனர். காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த திருமணத்துக்கு நாடகக் கோஷ்டியில் பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். வாதப் பிரதிவாதங்கள் நிகழ்கின்றன. விசாரணை முடிகிறது. காலைக் காட்சி முடிந்து மாலைக் காட்சி தொடங்குவது போல விசாரணை முடிந்து நடிகர்களின் அன்றாட வாழ்க்கை தொடங்குகிறது. இதுவே தி.ஜா வின் ‘’ஒரு விசாரணை’’ சிறுகதை.
போர்ஷன் காலி
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நடுவயது கொண்ட இரண்டு நண்பர்கள். கலையில் பொது விஷயங்களில் ஆர்வம் கொண்ட ஒரு பேராசிரியர் ஒருவர். அவரது நண்பரான சூது வாது அறியாத இன்னொருவர். பேராசிரியர் மகள் பிரசவத்துக்காக பிறந்தகம் வந்திருக்கும் சமயம் பேராசிரியர் தன் வீட்டின் கீழ் போர்ஷனில் குடியிருக்கும் குடும்பத்தின் இளம் பெண்ணுக்கு ஒரு காதல் கடிதம் எழுதிக் கொடுத்ததாக ஒரு பேச்சு எழுகிறது. சுற்றியிருப்பவர்கள் கொதித்துப் பொகிறார்கள். குடித்தனக்காரர் வீட்டை காலி செய்து விட்டு சென்று விடுகிறார். நீண்ட ஆண்டுகளாக வீட்டை காலி செய்யாமல் இருந்தார் ; எந்நேரமும் சினிமாப் பாட்டு அவர்கள் வீட்டில் ஓடிக் கொண்டேயிருந்தது ; அதன் காரணத்துக்காகவே இப்படி ஒரு அதிர்ச்சிகரமான நடவடிக்கை எடுத்தேன் என்கிறார் பேராசிரியர் சூது வாது அறியாத நண்பரிடம். நண்பருக்கு நம்புவதா நம்பாமல் இருப்பதா என்று தெரியவில்லை. தன் மனைவியிடம் பேராசிரியர் சொன்னதை அப்படியே வந்து சொல்கிறார். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்; அதை அப்படியே கேட்டு நம்புகிறீர்களே என்கிறாள் மனைவி. தி.ஜா வின் ‘’போர்ஷன் காலி’’ நல்ல ஒரு ஹாஸ்ய கதை.
Saturday, 25 January 2025
ஒரு காட்சி
Wednesday, 22 January 2025
24 மணி நேரம்
Sunday, 19 January 2025
ஒரு திருப்தி
சில நாட்களுக்கு முன்னால், ராஜாஜியின் கல்வித் திட்டம் நூலும் தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு நூலும் ஆர்டர் செய்திருந்தேன். கூரியர் மூலம் வந்திருந்தன. அப்போது வீட்டில் நான் இல்லை. எனது மேஜை மீது பார்சல் இருந்தது. எனது மேஜையில் இருக்கும் ஸ்விஸ் கத்தி மூலம் பார்சலைப் பிரித்தேன். இரண்டு நூல்கள் என் முன்னால்.ராஜாஜியின் கல்வித் திட்டம் குறித்த நூலை முதலில் கையில் எடுத்தேன். முன்னட்டையைப் பார்த்தேன். பின்னட்டையை வாசித்தேன். நூலை சில பக்கங்கள் வாசிக்கத் தொடங்கினேன்.அன்றைய தினம் அந்நூலை வாசித்து முடித்தேன். அது குறித்து ஒரு பதிவும் எழுதினேன். இருப்பினும் புனைவா அல்லது அ-புனைவா எது முதல் தேர்வு என்னும் பரிசீலனையில் மனம் ஈடுபட்டது. நான் இரண்டையும் வாசிப்பவன். இருந்தாலும் மனம் கேட்டது எது முதல் தேர்வு என. சில மாதங்களுக்கு முன்னால் தினமும் தி.ஜானகிராமனின் ஒவ்வொரு சிறுகதையையும் வாசித்து அந்த கதைகள் குறித்த குறிப்புகளை எழுதி வந்தேன். இரண்டு பகுதிகளில் முதல் பகுதி மட்டுமே என்னிடம் இருந்தது. புதிய பதிப்பை ஆர்டர் செய்து வாங்க நாள் ஆகி விட்டது.
இன்று ராஜாஜியின் கல்வித் திட்டம் நூல் குறித்த குறிப்பை வாசித்து விட்டு நண்பர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். இந்த விஷயம் தொடர்பாக எழுதப்பட்டிருக்கும் இன்னொரு நூல் குறித்தும் நண்பர் அதில் குறிப்பிட்டிருந்தார். என் மனக் கேள்விகள் நீங்கி மனம் சமாதானம் ஆனது.
ராஜாஜியின் கல்வித்திட்டம் - வாசகர் கடிதம்
ஒப்புகைச் சீட்டு விவகாரம் - அடுத்து என்ன செய்யப் போகிறேன்?
ஒரு மாதம் முன்பு ஒப்புகைச் சீட்டு விவகாரம் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் அவ்விஷயத்தின் கோப்பினைக் கேட்பது என முடிவு செய்த போது என் முன் மூன்று சாத்தியங்கள் இருந்தன. முதலாவது, சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் கோப்பைக் கேட்பது. இரண்டாவது, சி.பி.கி.ராம்.ஸ் புகார் , எழுத்துபூர்வமான புகார் இரண்டின் கோப்பையும் கேட்பது, மூன்றாவது எழுத்துப்பூர்வமான புகாரின் கோப்பைக் கேட்பது.
எழுத்துப்பூர்வ புகாரின் கோப்பை முதலில் கேட்பது என்ற வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தேன். எனது உள்ளுணர்வு அவ்விதம் செய்யச் சொன்னது.
எழுத்துப்பூர்வமான புகார் சி.பி.கி.ராம்.ஸ் புகாருடன் இணைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தாலும் ஒருவேளை சி.பி.கி.ராம்.ஸ் புகார் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால் பதிலளிக்கும் ஒரு மாத காலகட்டத்தில் ஏதேனும் நிகழ்த்த விசாரணை அதிகாரிக்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவ்விதம் செய்தேன்.
நாளை தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் கோப்பை கேட்க இருக்கிறேன். முப்பது நாட்களுக்குள் பதில் அளிக்கப்பட வேண்டும். விசாரணை அதிகாரிக்கு மேலும் முப்பது நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
என்ன நிகழ்கிறது என்பதைக் காண்போம்.
ஒப்புகைச் சீட்டு விவகாரம் - RTI பதில் - சில அவதானங்கள்
அவதானம் 1
புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு அஞ்சல்துறை கண்காணிப்பாளர் துணை அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருக்கிறார். 43 நாட்கள் கடந்த பின்னும் 06.12.2024 வரை விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. 06.12.2024 அன்றும் அந்த புகார் சி.பி.கி.ராம்.ஸ் உடன் இணைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவதானம் 2
19.10.2024ல் புகார் அனுப்பப்பட்ட பின் ஒப்புகைச்சீட்டு விவகாரத்துடன் தொடர்புடைய ஊழியர்களிடம் எழுத்துப்பூர்வமான விளக்கம் கோரப்படவில்லை என்பதை ஆர்.டி.ஐ தகவல் மூலம் அறிய நேர்கிறது.
அவதானம் 3
அக்டோபரில் நான் அளித்த புகார் ஒரு நிகழ்வு. நவம்பரில் நான் அளித்த சி.பி.கி.ராம்.ஸ் புகார் இன்னொரு நிகழ்வு. இரண்டுமே ஒப்புகைச்சீட்டு விவகாரம் என்றாலும் இரண்டும் இரண்டு தனித்தனி நிகழ்வுகள்.