Thursday, 28 April 2022
கூட்டுச் செயல்பாடு
Wednesday, 27 April 2022
கடல் பார்த்தல்
ஓட்டம்
Tuesday, 26 April 2022
சொந்த வேலை
இப்போதெல்லாம் பொழுது விடிந்தால் செய்வதற்கென ஏகப்பட்ட வேலைகள் வரிசை கட்டி நிற்கின்றன. எது பொது வேலை எது சொந்த வேலை எனப் பிரிக்க இயலாதவாறு அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்த வண்ணம் உள்ளது. வேலை என்று வந்து விட்டால் பொது வேலை மற்றவர்கள் வேலை என் வேலை என்று பார்க்க மாட்டேன். அனைத்தையும் ஒன்றாகக் கருதியே செய்வேன். என்னுடைய தொழில் சார்ந்து நான் பணிகளை மேற்பார்வையிட்டால் போதும். ஆனால் பொது வேலைகளில் அனைத்தையும் நான் தான் செய்ய வேண்டும். எது செய்தாலும் துல்லியமாக சரியாக செய்ய வேண்டும் என்று எண்ணும் மனநிலையைக் கொண்டிருப்பதால் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வேன். பொது வேலை செய்பவன் தான் இன்னும் கொஞ்சம் முயன்றால் மேலும் நிறைய மனிதர்களை சென்றடைய முடியும் என்று தான் நினைப்பான். நிறைய மனிதர்கள் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கிறார்கள் என அறிவான். மெய் வருத்தம் பாராது கண் துஞ்சாது பணிகளைச் செய்வதுதான் அவற்றைச் செய்வதற்கான ஆகச் சிறந்த வழி என்பது ஓர் உண்மை.
ஒரு கிராமம். அதில் மூன்று குக்கிராமங்கள் உள்ளடங்கி உள்ளன. அந்த கிராமத்தின் ஒரு குக்கிராமத்தையும் இன்னொரு குக்கிராமத்தையும் பிராட்கேஜ் ரயில்வே லைன் பிரிக்கிறது. சாலை மட்டத்திலிருந்து ஏழு அடி உய்ரம் பிராட்கேஜ் ரயில் பாதை உயர்ந்து விட்டது. எனவே ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குக்கிராமங்களும் துண்டிக்கப்பட்டு விட்டன. பதினைந்து அடி தொலைவு உள்ள அந்த பாதையைக் கடந்து வர பத்து கிலோமீட்டர் சுற்றி வர வேண்டும் என்ற நிலைமை. முன்னர் மீட்டர்கேஜ் ரயில் பாதை இருந்த போது ஆளில்லா ரயில் கிராசிங் இருந்திருக்கிறது. பிராட்கேஜ் ஆனதும் இல்லாமல் போனது. ரயில்வே சப் வே அமைத்தால் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குக்கிராம மக்கள் 10 கி.மீ சுற்றி வருவது குறையும். இதனை ரயில்வேயின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். முதலில் அந்த ஊரின் மூத்த குடிமகன் ஒருவரை ரயில்வேக்கு மனு அனுப்ப சொல்லலாம் என எண்ணி அவரிடம் சொல்லி அனுமதி பெற்று அந்த மனுவை எழுதினேன். முயற்சி மேற்கொள்ள அந்த மனுவே போதும். என்றாலும் அந்த கிராம மக்கள் ஆயிரம் பேரின் கையெழுத்து பெற்று அந்த மனுவை அனுப்ப வேண்டும் என்று தோன்றியது. நல்ல யோசனைதான். ஆனால் ஆயிரம் பேரின் கையெழுத்து பெற குறைந்தது பத்து நாட்கள் ஆகி விடும். இதற்கு முன் மூன்று விஷயங்களுக்காக மூன்று முறை ஆயிரம் பேரின் கையெழுத்தைப் பெற்று அனுப்பி உள்ளேன். இந்த விஷயத்தை நான்காவதாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனதின் ஒரு பகுதி கூறுகிறது. மனதில் தோன்றி விட்டால் அதனைச் செய்து விட வேண்டும் . இல்லையென்றால் குறையாகவே இருக்கும். கட்டிடப் பொறியாளர்கள் கட்டிட வரைபடம் வரைய டிராயிங் ஷீட் இருக்கும். காகித அளவு ஏ1. பொதுப் பயன்பாட்டில் இருக்கும் ஏ4 காகித பரப்பை விட எட்டு மடங்கு பெரியது. அந்த ஷீட்டை ஏ4ன் அளவுக்கு மடித்து விட முடியும். இன்ஜினியரிங் டிராயிங் வகுப்பின் முதல் பாடமே டிராயிங் ஷீட்டை ஏ4 அளவுக்கு மடிப்பதுதான். அதன் நுனியை மட்டும் பிடித்தோம் என்றால் முழு ஷீட்டும் விரிவாகும். குறிப்பிட்ட விதத்தில் மடித்தால் ஏ4 போல இருக்கும். ஆயிரம் பேரின் கையெழுத்தையும் அந்த டிராயிங் ஷீட்டில் பெற்று விடலாம் என்று யோசித்தேன். இதைப் போல இதற்கு முன் யாரும் முயன்றிருப்பார்களா என்று தெரியவில்லை. அதற்காகவேனும் செய்து பார்க்க வேண்டும்.
முதலில் ஒரு மனு எழுதினேன். பின்னர் அந்த கிராமத்துக்குச் சென்று அங்குள்ள ஒருவருடன் இடத்தை பார்வையிட்டு வந்தேன். என் நண்பர் ஒருவரின் நண்பர் ரயில்வே பொறியாளர். என் நண்பருக்கு ஃபோன் செய்து விபரம் சொன்னேன். அவர் தன் நண்பரிடம் விசாரித்து சொன்னார். முயன்றால் இந்த விஷயம் சாத்தியமானது தான் என்றார். நிலுவைப் பட்டியலில் முதலிடத்துக்கு வந்து விட்டது இந்த விஷயம்.
எனக்குச் சொந்தமான ஒரு ஃபிளாட் உள்ளது. அதில் என்னுடைய நிறுவனத்தின் கட்டுமானப் பணிக்கு தேவைப்படும் பிளம்பிங், எலெக்ட்ரிக் பொருட்களை போட்டு வைத்திருப்பேன். அந்த ஃபிளாட்டில் தான் அன்னதானம் செய்ய சமையல் நடைபெற்றது. ஒரு நண்பர் அதனை வாடகைக்கு வேண்டும் என்று கேட்டார். அந்த பகுதியில் வழக்கமாக உள்ள வாடகையை விட கூடுதலான வாடகை தருவதாகக் கூறினார். நண்பர் விரும்பிக் கேட்கிறாரே என்று சம்மதித்தேன். அதற்கு ஒரு வாடகை ஒப்பந்தம் போட வேண்டும். மாதிரி படிவம் அனுப்பி வைத்தார். இரண்டு நாளாக ஒரே அலைச்சல். படிவத்தை நிரப்பவேயில்லை. இன்று இரவு தான் அதனை நிரப்பினேன். என்னுடைய பெயரையும் முகவரியையும் எழுத வேண்டும். ஃபிளாட்டின் முகவரியை எழுத வேண்டும். இவை இரண்டையும் செய்த போது ஏதோ பெரிய வேலை ஒன்றைச் செய்ததைப் போல தோன்றியது எதனால் என்று யோசித்துப் பார்த்தேன்.
Sunday, 24 April 2022
மனிதர்க்குத் தோழன்
Wednesday, 20 April 2022
உவகை
Monday, 18 April 2022
சங்கப் பலகை
Saturday, 16 April 2022
நினைவில் காடுள்ள மிருகம்
Thursday, 14 April 2022
லௌகிகம்
Monday, 11 April 2022
நீதியை நோக்கி
Friday, 8 April 2022
இரும்படிக்கும் இடத்தில் ( நகைச்சுவைக் கட்டுரை)
Thursday, 7 April 2022
விழிப்புணர்வு பிரசுரம்
‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் பணிவான
வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் பகுதியில் உழவர்கள் அல்லும் பகலும்
விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயம் தொடர்புடைய உழவு, நீர் பாய்ச்சல், நாற்றங்கால்
உருவாக்கம், நடவு, களையெடுத்தல், அறுவடை ஆகிய விஷயங்களையும் மரப்பயிர்கள் தொடர்பான
விஷயங்களையும் முழுமையாக அறிந்துள்ளார்கள். எனினும் மரப்பயிர்களில் அதிக அளவு பயன்
விவசாயிகளுக்குக் கிடைக்க சில எளிய வழிமுறைகளைக் கையாள வேண்டியிருக்கிறது.
‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக மரக்கன்றுகள்
நடுவதில் பின்பற்ற வேண்டிய கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை விவசாயிகள் கவனத்துக்குக்
கொண்டு வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
1. மரம் நட
எடுக்க வேண்டிய குழியின் அளவு
ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி அது
பிறந்ததிலிருந்து மூன்று ஆண்டுகளில் 90 சதவீதம் நிகழ்ந்து விடும் என்று மருத்துவ அறிவியல்
கூறுகிறது. ஒரு மரத்தின் வளர்ச்சியும் அது நடப்பட்ட ஆறு மாத காலத்தில் பெருமளவு தீர்மானிக்கப்பட்டு
விடும். மரத்தின் வளர்ச்சியில் நடப்பட்டதும் அது வேர் விடுதல் என்பது மிக முக்கியமான
கட்டம்.
எந்த மரக்கன்றும் நட முதல் படியாக இரண்டு
அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழி வெட்டப்பட வேண்டும். அந்த
குழியில் மக்கிய சாண எரு , மக்கிய ஆட்டு உரம், மக்கிய இலை தழைகள் ஆகியவற்றை அந்த குழி
நிரம்பும் வண்ணம் முழுமையாக நிரப்ப வேண்டும்.
2. ஒரு மரக்கன்றுக்கும்
இன்னொரு மரக்கன்றுக்கும் இடையே உள்ள இடைவெளி
ஒரு மரக்கன்றுக்கும் இன்னொரு மரக்கன்றுக்கும்
இடையே உள்ள இடைவெளி 12 அடி என்ற அளவில் இருக்க வேண்டும். இரண்டு மரங்களும் சிறப்பாக
வளர்வதை இந்த இடைவெளி உறுதி செய்யும். அருகருகே மரங்கள் நடப்பட்டால் இரண்டு மரங்களின்
வளர்ச்சியும் பாதிக்கப்படும். இரண்டும் போதிய பயன் தராமல் போகும்.
3. சூரிய
ஒளி
மரக்கன்றுகள் போதிய சூரிய ஒளியில் வளரும்
வண்ணம் நடப்பட வேண்டும். நிழலில் நடப்படும் மரங்கள் எதிர்பார்த்த பலன் தராமல் போகக்
கூடும்.
4. நீர் வார்த்தல்
முதல் ஆறு மாதம் வாரத்துக்கு மூன்று
முறையும் அதன் பின்னர் வாரத்துக்கு இரண்டு முறையும் மரக்கன்றுகளுக்கு நீர் வார்க்க
வேண்டும். மழைக்காலத்தில் மழை பெய்து மரக்கன்றுகளுக்குத் தேவையான நீர் கிடைத்து விடும்.
கோடைக்காலத்தில் கன்றுகளுக்கு போதிய அளவு நீர் கிடைப்பதை விவசாயிகள் உறுதி செய்ய வேண்டும்.
5. மேய்ச்சல்
மரக்கன்றுகளை ஆடு மாடு மேயாமல் இருப்பது
மிகவும் அவசியம். ஆடு மாடு புழங்கும் இடம் எனில் எளிய முறையிலேனும் வேலி அமைப்பது மரத்தின்
வளர்ச்சிக்கு உதவும்.
விவசாயிகள் அதிக அளவில் மரப்பயிர் செய்து
அதன் பொருளாதாரப் பயன்களை அவர்கள் அடைய வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பின்
விருப்பம். எனவே மேற்கண்ட வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு விவசாயக் குடிமக்களை ‘’காவிரி
போற்றுதும்’’ கேட்டுக் கொள்கிறது.
விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் சித்திரை
மாதம் மரக்கன்றுகள் வழங்கப்படும். அதற்குள் அவர்கள் வீட்டிலோ அல்லது வயலிலோ அல்லது
தோட்டத்திலோ எங்கு உத்தேசித்திருக்கிறார்களோ அங்கு மேலே குறிப்பிட்ட வண்ணம் குழி எடுக்குமாறு
கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்,
அமைப்பாளர்
காவிரி போற்றுதும்
Monday, 4 April 2022
வீடு பேறு
Saturday, 2 April 2022
தாயின் மணிக்கொடி
தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
சரணங்கள்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)
பட்டுத் துகிலென லாமோ? - அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)
இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)
அணியணி யாயவர் நிற்கும் - இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)
செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)
கன்னடர் ஓட்டிய ரோடு - போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்,
பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)
பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)
பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)
சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)