Wednesday, 29 June 2022
வினாக்களும் விடைகளும்
Monday, 27 June 2022
நாடி நான் கண்டுகொண்டேன்
Saturday, 25 June 2022
நெருக்கடி நிலை
பறவை நோக்கு
Friday, 24 June 2022
இசை
Thursday, 23 June 2022
பறவையின் துயர் தீர்த்தவன்
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-
Wednesday, 22 June 2022
போர்த்தொழில் பழகு
Tuesday, 21 June 2022
தேக்கு - அதிகமாக கேட்கப்பட்ட வினாக்கள்
Monday, 20 June 2022
யானை பிழைத்தவேல்
யானை பிழைத்தவேல் - பகுதி 1
எண்கள்
Sunday, 19 June 2022
கரம்
கரங்களின் நுனிகளில் திருமகள் வசிக்கிறாள்
உள்ளங்கையில் கலைமகள் வீற்றிருக்கிறாள்
கைகளின் அடிப்பாகத்தில் மலைமகள் வாசம் செய்கிறாள்.
விடிகாலைப் பொழுதில் கரங்களை வணங்குங்கள்.
- ஒரு சுலோகம்
ஒரு கை விரல் மூலம் எத்தனை எண்ணிக்கை எளிதாக எண்ண முடியும்?
பொதுவாக ஐந்து என்று நினைப்போம். ஒவ்வொரு விரலிலும் மூன்று கணுக்கள் உள்ளதால் பதினைந்து எண்ண முடியும் என்று உள்ளங்கையைப் பார்த்து அறிவோம்.
மேலும் அதிகமாய் எளிதில் எண்ண ஒரு வழி சொல்கிறேன்.
உங்கள் வலது உள்ளங்கையை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் மோதிர விரலின் நடுக்கணுவிலிருந்து எண்ணத் தொடங்குங்கள். மோதிர விரலின் கீழ்க்கணு சுண்டு விரலின் அடிக்கணு நடுக்கணு மேல்கணு என எண்ணிக் கொண்டே சென்று மோதிர விரலின் மேல்கணு நடுவிரலின் மேல்கணு ஆள்காட்டி விரலின் மேல் மேல்கணு நடுக்கணு கீழ்க்கணு என ஒரு சுற்றை முடியுங்கள். இந்த சுற்றின் மூலம் 10 எண்ணிக்கையை எண்ண முடியும்.
இரண்டாவது சுற்றை வலது கை மோதிர விரலின் கீழ்க்கணுவில் தொடங்கி முன்னர் சென்ற விதத்திலேயே எண்ணிக் கொண்டு செல்லுங்கள். ஒரு கணு விட்டு துவங்கியிருப்பதால் அந்த சுற்றில் 9 எண்ணிக்கையை எண்ண முடியும்.
பின்னர் சுண்டு விரலின் கீழ்க்கணுவிலிருந்து துவக்க வேண்டும் . இதன் மூலம் 8 எண்ணிக்கையை எண்ண முடியும்.
இவ்வாறே ஆள்காட்டி விரலின் கீழ்க்கணு வரை சென்றால் 55 எண்ணிக்கை வரை எளிதில் எண்ண முடியும்.
10+9+8+7+6+5+4+3+2+1 = 55
Friday, 17 June 2022
நல்வரவு
Thursday, 16 June 2022
எழுக
நண்பரின் ஊரில் நாளை கணநாதர் ஆலய குடமுழுக்கு விழா. நாளைய தினமே தேக்கு மரக்கன்றுகளை தங்கள் வயலில் நட வேண்டும் என நண்பரும் நண்பரின் குடும்பத்தினரும் விரும்பினர். அந்த ஆலயத்தின் அடுத்த குடமுழுக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் நிகழும். அப்போது மரங்கள் நல்ல நிலைக்கு வந்திருக்கும் என்பதோடு ஆலய குடமுழுக்குடன் அவர்கள் முன்னெடுக்கும் செயல் ஏதோ ஒரு விதத்தில் பிணைக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் விரும்பினார்கள். இன்று தஞ்சாவூர் சென்று நர்சரியில் தேக்கு மரக் கன்றுகளை வாங்கி வர விரும்பினோம். ஊருக்குப் பக்கத்தில் ஆடுதுறையில் மரக்கன்றுகள் கிடைக்கும் என்று கூறினேன். தஞ்சாவூர் சென்று பார்ப்பது - அங்கே மரக்கன்றுகள் திருப்தியான நிலையில் இருந்தால் அவற்றை வாங்கிக் கொள்வது இல்லையேல் திரும்பி வரும் வழியில் ஆடுதுறையில் வாங்குவது என்று முடிவு செய்தோம். மொத்தம் ஆயிரம் கன்றுகள் தேவை. நாங்கள் நண்பரின் மாருதி ஆம்னி வாகனத்தில் சென்றோம். நண்பரின் சகோதரர் வாகனத்தை இயக்கினார்.
காலை 7 மணிக்குப் புறப்பட்டோம். தேக்கு மரக்கன்றுகள் குறித்தும் அவற்றின் பராமரிப்பு குறித்தும் பேசிக் கொண்டு சென்றோம். அடுத்த ஆறு மாதங்கள் முக்கியமான பருவம். கண்ணை இமை காப்பது போல காக்க வேண்டும் என்று சொன்னேன். உண்மையில் காப்பது என்பது தேக்கு மரக்கன்றுகளுடன் உணர்வுபூர்வமாக இணைந்து இருப்பதே. ‘’இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்’’ என்பது திருக்குறள். நிலத்தை பரம்பொருளின் வடிவம் என்கிறது இந்திய மரபு. பரம்பொருள் கருணைக்கடல். தன்னை அன்புடன் பிரியத்துடன் நினைப்பவர்களுக்கு தன் அருளை வாரி வழங்கும் இயல்புடையது. நிலமும் அத்தகையதே. நமது செயல் களத்துக்கு அடிக்கடி செல்ல வேண்டும். அதனுடன் உணர்வுபூர்வமாக பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். மானசீகமாக அதனுடன் உரையாட வேண்டும். அதனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த ஆறு மாதங்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சொன்னேன். மரம் என்பது தானாக வளர்வது என்ற பொது அபிப்ராயம் இங்கே வலுவாக உள்ளது. ஒரு மாத காலம் வரை அதற்கு கவனம் கொடுப்பார்கள். பின்னர் தானாக வளர்ந்து விடும் என்று இருந்து விடுவார்கள். தேக்கு மரங்கள் நன்றாகப் பருக்க வேண்டும். அப்போது தான் அதற்கு ஆக உச்சமான விலை கிடைக்கும். நன்றாகப் பருக்க வேண்டும் என்றால் அதற்குத் தேவையானதை நாம் கொடுக்க வேண்டும். எனவே தண்ணீர் ஊற்றுவது மிகவும் அவசியம். என் அபிப்ராயங்களை நண்பரிடம் சொல்லியவாறு வந்தேன்.
சுவாமிமலையில் ஒரு உணவகம். தஞ்சாவூர் திருச்சி செல்லும் போது அங்கே காலை உணவருந்துவது வழக்கம். அந்த வகையில் உணவக உரிமையாளர் எனக்கு பழக்கமானவர் ஆனார். என்னைக் கண்டதும் பிரியத்துடன் நலம் விசாரித்தார்.
கல்லணை - பூம்புகார் சாலை அகலப்படுத்தப்பட்டிருப்பதால் கார் இயக்க வசதியாக இருக்கிறது என நண்பரின் சகோதரர் சொன்னார். ‘’செல்வம் சாலைகளை உண்டாக்கவில்லை. சாலைகள் தான் செல்வத்தை உண்டாக்குகின்றன’’ என்ற தாமஸ் ஜெபர்சனின் மேற்கோளை நண்பரிடம் சொன்னேன். பட்டுக்கோட்டைக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே உள்ள சாலைக்கு ‘’சேது ரஸ்தா’’ என்று பெயர். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் யாத்ரிககர்களின் சேவைக்காக அந்த சாலையில் பல சத்திரங்களை அமைத்தனர். 2003ல் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் பேருந்தில் மனோராவைப் பார்ப்பதற்காக நானும் எனது நண்பர் ஒருவரும் திருவாரூர் திருத்துறைப்பூண்டி மார்க்கமாக பட்டுக்கோட்டை சென்றோம். அப்போது அங்கே தொண்டி என்ற ஊருக்கான பேருந்து இருந்தது. சேது ரஸ்தாவில் பயணிக்கலாம் என்ற ஆவலில் அந்த பேருந்தில் ஏறி தொண்டி சென்று அங்கிருந்து இராமேஸ்வரம் சென்றோம். அன்று அது ஒரு ஒற்றைச் சாலை. மனமேல்குடி, மீமிசல் ஆகிய கடற்கரை கிராமங்களின் வழியே செல்லும். 2010 ஐ ஒட்டிய ஆண்டிலேயே அது கிழக்குக் கடற்கரை சாலையுடன் இணைக்கப்பட்டு இப்போது பிரமாதமான சாலையாக உள்ளது என்று கூறி பட்டுக்கோட்டை - தொண்டி பேருந்து பயணத்தை நினைவு கூர்ந்தேன்.
நண்பரிடமும் நண்பரின் சகோதரரிடமும் மனோரா சென்றிருக்கிறீர்களா என்று கேட்டேன். ‘’மனோரா’’ எனக்கு ஒரு காலத்தில் மிகவும் பிடித்த இடம். பித்துப் பிடித்ததைப் போல அடிக்கடி அங்கே செல்வேன். அந்த கடற்கரை - அந்த நிலக்காட்சிகள் ஆகியவை என் மனம் கவர்பவை. நண்பர்கள் சென்றிருந்தார்களே தவிர அதன் வரலாறை அவர்கள் அறியவில்லை.
ஐரோப்பாவில் நெப்போலியன் பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாய் விளங்கிய போது ‘’வாட்டர்லூ யுத்தம்’’ நிகழ்ந்தது. அந்த யுத்தத்தில் நெப்போலியனை களத்தில் சந்தித்தது கார்ன்வாலிஸ். அவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர். வாட்டர்லூ களத்தில் பனிப்பொழிவு கடுமையாக இருந்ததால் பிரெஞ்சுப் படையின் துப்பாக்கிகள் சரிவர இயங்கவில்லை. அவற்றால் வெடிமருந்து வெடிப்பதற்குத் தேவையான வெப்பநிலையை துப்பாக்கியில் பராமரிக்க இயலவில்லை. ஆனால் ஆங்கிலப் படையின் துப்பாக்கிகள் குடகு மலையின் மழைக்காடுகளில் இருந்த தேக்கு மரத்தால் ஆனவை. பனி பொழியும் களத்திலும் அவை திறம் படச் செயல்பட்டன. வாட்டர்லூ களத்தில் கார்ன்வாலிஸ் வென்றதற்கு முக்கியக் காரணம் அது. அந்த வெற்றியின் நினைவாக தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் மனோராவைக் கட்டினார். அது கலங்கரை விளக்கமாகவும் பயன்பட்டிருக்கிறது என்று சொன்னேன். வரலாறு என்றும் அறியப்பட வேண்டிய ஒன்று. வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத சமூகங்களுக்கு மீண்டும் வரலாறு அந்த பாடத்தை நடத்தும். தற்செயலாக என்றாலும் உரையாடலின் மைய இடத்துக்கு தேக்கு வந்ததை மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
தஞ்சாவூர் நர்சரியில் தரமான மரக்கன்றுகள் இருந்தன. ஆயிரம் மரக்கன்றுகளை டாடா ஏஸ் வண்டியில் ஏற்ற ஏற்பாடு செய்து விட்டு நண்பரை பொறுப்பாக டாடா ஏஸ் வாகனத்தில் பயணித்து ஊருக்கு கொண்டு வந்து சேர்த்திடுங்கள் என்று கூறி விட்டு நாங்கள் ஆம்னியில் முன்னதாகவே ஊருக்குப் புறப்பட்டோம். நேரம் அப்போதே மதியம் 1 மணி ஆகி விட்டது. நண்பரின் உறவினர் ஒருவர் கோயம்புத்தூரிலிருந்து ஊருக்கு வருகிறார். அவர் அலைபேசியில் அழைத்தார். அவரை தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இறங்கச் சொல்லி விட்டோம். ரயில் நிலையம் சென்று அவரை அழைத்துக் கொண்டு நாங்கள் புறப்பட்டோம்.
உக்கிரமான வெயில். தஞ்சாவூர் பை பாஸில் சாலியமங்களம் வழியாக பாபநாசம் சென்று அங்கிருந்து குடந்தை சாலையைப் பிடிக்க விரைந்து கொண்டிருந்தோம். நான் இரண்டு பெண்கள் கம்மங்கூழ் விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். நண்பரிடம் கம்மங்கூழ் குடிப்போமா என்று கேட்டேன். வண்டியை நிறுத்தினோம். இரண்டு பெண்கள் கூழ் விற்கிறார்கள். இரண்டு பானைகள். வத்தல் மற்றும் மோர்மிளகாய். மூன்று சொம்பு கூழ் வாங்கி அருந்தினோம். கூழ் விற்கும் பெண் சர சர என்று வேலைகளைச் செய்வதைக் கவனித்தேன். தனது பணியை தனது கடமையை செவ்வனே செய்யக் கூடிய ஒருவர் வாழ்க்கை குறித்த மேலான புரிதல் கொண்டவராக இருப்பார் என்பது எனது நடைமுறைப் புரிதல். மயிலாடுதுறை செல்ல எந்த சாலையில் திரும்ப வேண்டும் என்று நண்பர் கேட்டார். அந்த அம்மா பதில் சொன்னார்கள். தனது மகளை மயிலாடுதுறை அருகில் ஒரு கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்திருப்பதாகக் கூறினார்கள். எந்த கிராமம் என்று கேட்டேன். ஊர்ப் பெயரைச் சொன்னார்கள். தடுப்பூசிக்காக செயல் புரிந்த கிராமத்துக்குப் பக்கத்துக் கிராமம். அந்த ஊருக்கு நான் சென்றிருக்கிறேன் என்று சொன்னேன். அவர்களுக்கு மிகவும் சந்தோஷம். நாங்கள் தேக்கு மரக்கன்றுகள் வாங்க வந்தோம் என்று கூறினேன்.
நண்பர் 3 ஏக்கர் நிலத்தில் முழுமையாக தேக்கு பயிரிடுகிறார் என்று சொன்னேன். கூழ் விற்கும் பெண்ணின் உதவியாளருக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது என்று சொன்னார். முழுமையாக இல்லாவிட்டாலும் வயலில் பத்து தேக்கு கன்று நட்டு வளர்த்துக் கொள்ளுங்கள். 15 ஆண்டுகளில் உங்களுக்கு 15 லட்சம் பணம் கிடைக்கும் என்று சொன்னேன். அவர்கள் கவனமாகக் கேட்டார்கள். ‘’ நீங்கள் உழைப்பதற்கு தயங்கக் கூடியவர்கள் இல்லை. உழைக்க வேண்டும் என்ற தீரா ஆர்வம் இருப்பதால் தான் இந்த வெயிலில் கூழ் விற்கிறீர்கள். இதில் நீங்கள் செலுத்தும் உழைப்பில் நூறில் ஒரு பங்கை வயலில் 15 தேக்கு மரக்கன்றுகள் வளர்க்க செலுத்துங்கள். 15 ஆண்டுகளில் நல்ல பலன் கிடைக்கும். பணம் ஈட்ட வேண்டும் என்று தான் கூழ் வியாபாரம் செய்கிறீர்கள். உங்களால் 15 தேக்கு மரங்களை சர்வ சாதாரணமாக வளர்க்க முடியும். அவசியம் செய்யுங்கள் ‘’ என்று கூறினேன். அவர்கள் இருவரும் ஆர்வமானார்கள்.
‘’நான் ஒரு சிவில் இன்ஜினியர். விவசாயிகளுக்கு விவசாயத்தில் அதிக வருமானம் கிடைக்க எளிய வழிகளை பரிந்துரைப்பதை ஆர்வத்தின் காரணமாக செய்கிறேன். நான் இன்னும் சில நாட்களில் மீண்டும் இந்த ஊருக்கு வருகிறேன். உங்கள் வயலை நேரில் பார்த்து எப்படி தேக்கு மரம் நட வேண்டும் எப்படி பராமரிக்க வேண்டும் என்று கூறுகிறேன். அதன் படி செய்யுங்கள். நீங்கள் வழக்கமாக செய்யும் நெல் விவசாயமும் செய்து கொள்ளுங்கள். அதனுடன் இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்றேன். இருவரின் அலைபேசி எண்ணையும் பெற்றுக் கொண்டு எனது அலைபேசி எண்ணை அளித்து விட்டு புறப்பட்டோம்.
ஒரு பயணம் இன்னொரு பயணத்துக்கு வழிகோலுகிறது. ஒரு செயல் இன்னொரு செயலை நிகழ்த்துகிறது.
Wednesday, 15 June 2022
கதை சொல்லச் சொன்னால்
Monday, 13 June 2022
திங்கள் வலித்த கால்
நீரில் எழுத்தாகும்
Wednesday, 8 June 2022
ஊற்று
Tuesday, 7 June 2022
இமய நடை
எனக்கு இங்கே ஒரு நண்பர் இருக்கிறார். நாங்கள் இருவரும் மெல்ல நடக்கும் வழக்கம் கொண்டவர்கள். சிற்றடிகளாக எடுத்து வைத்து நடப்பவர்கள். நடையில் வேகம் கூட்டாமல் சீராக செல்லும் பழக்கம் கொண்டவர்கள். எப்போதாவது மாலை வேலைகளில் ஐந்து ஆறு கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சிக்கு செல்வோம். அது ‘’வாக்கிங்’’ நோக்கத்துக்காக அல்ல ; ‘’டாக்கிங்’’ நோக்கத்துக்காக. அதிலும் அவர் அதிகம் பேச மாட்டார். நான் தான் பேசத் துவங்குவேன். இருவரும் நாற்பது ஐம்பது அடிகள் நடக்கத் தொடங்கியதும் நான் சட்டென்று ‘’தமிழ்நாட்டுல ஒரு விஷயம் கவனிச்சிருக்கீங்களா ! இங்க மாநில அரசாங்கம் மது விக்குது. தெருவுக்குத் தெரு விக்குது. ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் டார்கெட் கூட்டிக்கிட்டே போறாங்க. அப்படி செய்யறது குடிகாரங்களை மேலும் குடிகாரங்க ஆக்கறத தவிர வேற ஒன்னும் இல்ல. ஆனா மருத்துவம் மற்றும் சுகாதாரத்துல தமிழ்நாடு ரொம்ப ஃபார்வர்டுன்னு பெருமையா கிளைம் பண்றாங்க.’’ என்று ஆரம்பித்து மகாபாரத காலத்தில் மது எவ்விதம் சமூகத்தில் இருந்தது - நம் சமூகம் எவ்வாறு மதுவை பஞ்ச மா பாதகம் என வரையறுத்தது - சமணமும் பௌத்தமும் எவ்வாறு மதுவை சமரசம் இல்லாமல் எதிர்த்தன- திருக்குறளில் கள் உண்ணாமை - தமிழ்ச் சமூகங்களில் மது மீது இருந்த கட்டுப்பாடு என்ன - பிரிட்டிஷ் அரசு எப்படி சாராயக் கடையை வருவாய் மூலமாகக் கண்டது - வட மாநிலங்களில் புகையிலை - புகைப் பிடித்தல் அதிகம் ; இங்கே சாராயம் அருந்துபவர்கள் அதிகம் - தமிழ்நாட்டில் மதுவிலக்கை நீக்கியவர்கள் என இந்திய வரலாற்றை ஒரு சுற்று சுற்றி வருவேன். ஒரு எண்ணம் உருவானதும் அடுத்தடுத்து எண்ணங்கள் உருவாகி எல்லாவற்றையும் சொல்லி முடித்தால் 7 கி.மீ வாக்கிங் முடித்து வீட்டுக்கு வந்திருப்போம். வீட்டு வாசலில் நின்று மேலும் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பிரிந்து செல்வோம். வழக்கமாக நடைப்பயிற்சி செய்பவர்கள் வேகவேகமாக எங்களைத் தாண்டி நடந்து செல்வார்கள். நாங்கள் மெதுவாக நடப்போம்.
நண்பர் கைலாஷ் மானசரோவர் சென்று கயிலைநாதனை தரிசித்து வந்தார். அப்போது அவரது குழு மலையடிவாரம் சென்றதும் மலைப்பகுதிகளில் எப்படி நடக்க வேண்டும் என்று பயிற்சி தரப்பட்டிருக்கிறது. நண்பர் தரிசனம் முடிந்து ஊர் திரும்பியதும் நாங்கள் வழக்கம் போல வாக்கிங் போனோம்.
’’பிரபு ! ஹில் ஏரியால கொடுக்கற டிரெயினிங் மெல்லமா ஷார்ட் ஸ்டெப்ஸ்ல எப்படி நடக்கறதுன்னு தான். எங்க குரூப்ல நாப்பது பேரு. நான் மட்டும் தான் அந்த டிரெயினிங்ல ஜாலியா இருந்தேன். ஏன்னா நாம எப்படி நடப்பமோ அதுதான் ஹில்லுல நுரையீரலுக்கு கன்சிஸ்ட்டா ஆக்சிஜன் கிடைக்க ஈசியான வழி. ‘’
‘’அண்ணன் ! நாம் ரெண்டு பேரும் சேர்ந்து இமயமலைல டிரெக்கிங் போகணும் அண்ணன். பிளான் பண்ணுங்க’’ என்றேன்.
Monday, 6 June 2022
காணி நிலம்
Sunday, 5 June 2022
ஒரு சிறுவனும் ஒரு சலூனும்
Saturday, 4 June 2022
ஒரு மாதிரி வயல்
Wednesday, 1 June 2022
ஓர் அதிகாரி
சரித்திரம் (நகைச்சுவைக் கட்டுரை)
கல்லூரியில் கடைசி செமஸ்டரில் எங்களுக்கு ஒரு புராஜெக்ட் உண்டு. நான்காம் ஆண்டு துவங்கியதுமே இரண்டு இரண்டு மாணவர்களாக மொத்த வகுப்பின் எண்ணிக்கையைப் பிரித்து அந்த குழுவுக்கு ஒரு பேராசிரியரை வழிகாட்டியாக நியமித்து விடுவார்கள். வருகைப்பதிவின் அகர வரிசை அடிப்படையில் மாணவர் குழு உருவாக்கப்படும். ஒரு பெரிய கட்டிடம் ஒன்றினை டிசைன் செய்ய வேண்டும். நான்கு வருடமாக கற்ற அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைத்துத் தொகுத்துக் கொண்டால் புராஜெக்ட்டை நல்ல முறையில் நிறைவு செய்யலாம். அதனை வழிநடத்தவே வழிகாட்டி.
என்னுடைய புராஜெக்ட் மெட் ஒரு பேராசிரியரிடம் டியூஷன் படித்துக் கொண்டிருந்தான். அப்போது பிரபலமாக இருந்த ஆட்டோகேட் என்ற சாஃப்ட்வேரில் அவன் திறன் பெற விரும்பினான். அந்த பேராசிரியருக்கும் எங்கள் வழிகாட்டியாக இருந்த பேராசிரியருக்கும் கல்லூரி தொடர்பான பல விஷயங்களில் முரண்கள். அது எங்கள் புராஜெக்ட்டில் பிரதிபலிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் எங்கள் வழிகாட்டி எனது புராஜெக்ட் மெட்டிடம் ‘’நீ எப்படி புராஜெக்ட்டை நிறைவு செய்கிறாய் என்று பார்க்கிறேன்’’ என்று மிரட்டத் தொடங்கினார். எனக்கு அவர்கள் மோதலில் நேரடித் தொடர்பு இல்லை எனினும் நான் என் புராஜெக்ட் மெட் பாதிக்கப்படும் இடத்தில் இருந்ததால் தார்மீக ரீதியாக அவனுடன் துணை நின்றேன். அவ்வப்போது நடக்கும் விஷயங்களை என்னிடம் சொல்லி வருத்தப்படுவான். இதே நிலையில் ஒரு செமஸ்டர் அதாவது ஆறு மாதங்கள் முடிவடையும் நிலை வந்து விட்டது. ஒரு நாள் என்னிடம் ‘’வழிகாட்டி’’ மிகவும் வருத்துவதாக வருத்தப்பட்டான். துறைத் தலைவரிடம் சென்று கூறுவோம் என்றான். இன்னும் ஆறு மாதத்தில் கல்லூரி நிறைவடைய இருக்கும் நிலையில் ஒரு சிக்கலுக்குள் நுழைவது உசிதமா என்பது எங்கள் கவலையாக இருந்தது. இருப்பினும் துறைத் தலைவரிடம் சென்று தெரிவித்தோம். அவர் நல்ல மனிதர். நியாயமானவர். ஆனால் நாங்கள் எதிர்பாராத விஷயம் ஒன்றைச் சொன்னார். வாய்மொழியாக புகார் அளித்தால் இந்த விஷயத்தை விசாரிக்க முடியாது ; வேண்டுமானால் எழுத்துப் பூர்வமாக புகார் அளியுங்கள் என்றார். நாங்கள் வந்து விட்டோம். அவர் தெரிவித்த அன்று மாலை வகுப்புகள் முடிந்ததும் துறைத் தலைவர் அறைக்கு அருகில் இருந்த காலி வகுப்பறை ஒன்றில் அமர்ந்து விஷயத்தை தெரிவித்து ஒரு கடிதம் எழுதினோம். புராஜெக்ட் மெட்டின் கையெழுத்து கோழிக் கிறுக்கலாக இருக்கும். எனவே கடிதத்தை நான் எழுதினேன். ஆனால் அது பலவிதத்திலும் ரிஸ்க். இருந்தும் எனது கையெழுத்தில் எழுதினேன். ’’ஃபிரம்’’ பகுதியில் எங்கள் இருவரின் பெயர்களும் வகுப்பும். ‘’டூ’’ பகுதியில் துறைத்தலைவர். ‘’சப்ஜெக்ட்’’ பகுதியில் புராஜெக்ட் நிறைவு செய்வதில் உருவாக்கப்படும் இடையூறுகள் என குறிப்பிட்டோம். விஷயத்தை விளக்கி எழுதி துறைத் தலைவரிடம் வழங்கி விட்டோம். அப்போதும் அவரிடம் ‘’ நீங்கள் கூறுவதால் தான் இவ்வாறு செய்கிறோம். எங்களுக்கு இதில் விருப்பமில்லை’’ என்று கூறினோம். எங்கள் முன்னால் பச்சை மை பேனாவில் ஆங்கிலத்தில் ‘’ஃபார்வர்டர்ட்’’ என எழுதி தனது சுருக்கக் கையெழுத்தை இட்டார். நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம்.
மறுநாள் காலை எங்கள் முதல் பிரிவேளை வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது எங்கள் வழிகாட்டி வகுப்புக்கு வந்தார். அந்த நேரத்தில் அவர் அங்கு வருவது ஏன் என்று வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளருக்குப் புரியவில்லை. ஏனெனில் அவர் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பாடம் எடுப்பவர் இல்லை. மூன்றாம் ஆண்டில் தான் அவரது பாடம். என்ன விஷயம் என்று வகுப்புக்கு வெளியே சென்று கேட்டார். அவர்கள் சிறிது நேரம் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது எங்கள் இரண்டு பேருக்கு மட்டும் தெரியும். எங்கள் வகுப்பின் மற்ற மாணவர்களுக்குத் தெரியாது. வழிகாட்டியும் விரிவுரையாளரும் வகுப்புக்குள் வந்தனர். வழிகாட்டி தன்னைப் பற்றி நாங்கள் இருவரும் அளித்த புகாரைப் பற்றி சுருக்கமாகச் சொல்லி விட்டு நாங்கள் துறைத் தலைவருக்கு அளித்து ரிமார்க்ஸ்ஸுக்காக வழிகாட்டிக்கு ஃபார்வர்ட் செய்த கடிதத்தின் நகலை எல்லா மாணவர்களிடமும் ஒவ்வொரு காப்பி வழங்கினார். எங்கள் கைக்கும் ஒரு நகல் வந்தது. புராஜெக்ட் மெட் பதட்டத்துடன் இருந்தான். நான் மிகவும் சாவகாசமாக இருந்தேன். அதனை நான்காக மடித்து எனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன். எங்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளர் ‘’ ஒரு மாணவனுக்காக ஒரு பேராசிரியர் மேல் நடவடிக்கை எடுத்தது என்பது கல்லூரி சரித்திரத்திலேயே கிடையாது’’ என்றார். பின்னர் வழிகாட்டி இதனை துறையின் எல்லா பேராசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் வழங்க வேண்டும் . அதற்காக செல்கிறேன் என்றார்.
நான் அமைதியாக மெட்டிடம் சொன்னேன். ‘’இனிமேல் அவரை யாராலும் காப்பாற்ற முடியாது’’
‘’எப்படி சொல்கிறாய்?’’ என்று கேட்டான் மெட்.
‘’அவருடைய இயல்பு என்ன என்பதை அவரே வெளிக்காட்டி விட்டார். அதனை நாம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.’’ என்றேன்.
துறைத்தலைவர் அறைக்குச் சென்று நேற்று நாங்கள் அளித்த புகாரின் நகல் எங்கள் கைகளுக்கே வந்ததை எடுத்துக் கொண்டு காட்டி விட்டு கொடுத்து விட்டு வந்தோம். துறைத்தலைவர் அதிர்ச்சி அடைந்து விட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. துறைத் தலைவர் அதன் தலைவர். மூத்த பேராசிரியர் அதன் இன்னொரு உறுப்பினர். விசாரணை குறித்த தகவல் புலத்தலைவருக்கும் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் தெரிவிக்கப்பட்டது.
முதலில் வழிகாட்டியை அழைத்து அவருடைய தரப்பை கேட்டார்கள். பின்னர் அவரை அனுப்பி விட்டு எங்களை அழைத்து எங்கள் தரப்பைக் கேட்டார்கள். புராஜெக்ட் மெட் பதட்டமாக இருந்தான். நான் தான் பேசினேன்.
‘’நாங்கள் எழுத்து பூர்வமாக புகார் அளிக்க எவ்வளவு தயங்கினோம் என்பது துறைத் தலைவருக்குத் தெரியும். அவர் சொன்னதால் தான் அதனைச் செய்தோம். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதம் எங்களுடையது தான் என்றாலும் ஒப்படைக்கப்பட்ட பின் அது துறையினுடையதும் கூட. அஃபிஷியல் ரெகார்ட். அதில் துறைத் தலைவரின் சுருக்கக் கையொப்பமும் முத்திரையும் உள்ளது. இந்த செய்கை மூலம் துறைத் தலைவர் அலுவலக மாண்பை வழிகாட்டி சிதைத்துள்ளார்’’ என்று கூறினேன்.
‘’அவரிடம் பேசுகிறோம். உங்கள் புராஜெக்ட் நல்ல விதமாக நிறைவு செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்’’ என்றார்கள். நாங்கள் அதனை ஏற்கவில்லை.
கொஞ்ச நேரம் அறைக்கு வெளியே காத்திருக்கச் சொன்னார்கள். காத்திருந்தோம். சில நிமிடங்களில் ஒரு மணி ஒலித்தது. உள்ளே சென்றோம்.
‘’இந்த நிமிடத்திலிருந்து உங்கள் புராஜெக்ட்டுக்கு வழிகாட்டப் போவது துறைத் தலைவர் . இனி உங்கள் வழிகாட்டி துறைத்தலைவர்’’ என்று ஆங்கிலத்தில் கூறினார்.
நான் துறைத்தலைவருக்கு நன்றி கூறினேன். மெட்டிற்கு பதட்டத்தில் என்ன ஏது என்று புரியவில்லை. நான் அவனிடம் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். அவனும் நன்றி கூறினான்.
பலநாள் சிக்கல் தீர்ந்ததின் மகிழ்ச்சியில் கேண்டீனுக்கு சென்று தேனீர் அருந்தினோம். பதினைந்து நிமிடம் கழித்து மீண்டும் துறை அலுவலகத்துக்கு செல்லலாம் என்று சொன்னேன். மெட் ‘’ஏன்’’ என்றான். வழிகாட்டி மாற்றப்பட்டதை நோட்டிஸ் போர்டில் அறிவிப்பாக வெளியிட்டிருப்பார்கள் : அதனைச் சென்று பார்ப்போம் என்றேன். என் யூகம் சரியாக இருந்தது.
மறுநாள் காலை ‘’ ஒரு மாணவனுக்காக ஒரு பேராசிரியர் மேல் நடவடிக்கை எடுத்தது என்பது கல்லூரி சரித்திரத்திலேயே கிடையாது ‘’ என்று கூறியவரின் வகுப்பு அன்றும் முதல் பிரிவேளையாக இருந்தது. அப்போது அந்த வகுப்பில் இருந்த அனைவருக்கும் சரித்திரம் மாறியிருப்பது தெரிந்திருந்தது.