Saturday, 30 October 2021
இரவுப்பணி
பாரதி துதி
’’பாரதி துதி’’ பதிவை வாசித்து விட்டு ஆதித்ய ஸ்ரீநிவாஸ் ஃபோன் செய்தான்.
’’அண்ணன்! உங்களுக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் இருக்காங்க’’
‘’அது ஒரு கோணத்துல உண்மை. முழு உண்மைன்னு சொல்ல முடியாது.’’
‘’அந்த இன்னொரு கவிஞர் யாருண்ணா?’’
‘’உன்னைப் போல் ஒருவர்’’
‘’ நீங்க நிறைய பேரோட பேசறீங்க. விவாதிக்கறீங்க.’’
‘’நானா பண்ற ஃபோன்கால் கம்ப்பேரிடிவ்லி ரொம்ப குறைச்ச தான். இடம் பொருள் ஏவல் னு சொல்லுவாங்க இல்லையா. இப்பவும் செல்ஃபோன் இல்லாம லேண்ட் லைன் மட்டும் இருந்தா எனக்கு இன்னும் கன்வீனியன்ட்டா இருக்கும்னு தோணிட்டே தான் இருக்கு. பார்க்கலாம்’’
‘’அண்ணா! ஆஃபிஸ் ஒர்க் பிரஷர் ரொம்ப இருக்கு. காலைல விழிச்சதுமே அன்னைக்கு இருக்கற ஆஃபிஸ் வேலை ஞாபகம் வந்திடுது. அதுவே ஒரு நெருக்கடியை உருவாக்கிடுது. சாயந்திரம் ஆஃபிஸ் முடிஞ்சும் அது கண்டினியூ ஆகுது.’’
‘’நீ ஒரு கிரியேட்டர். கிரியேட்ட்டிவ் பிராஸஸ் என்பது என்ன? நம்மோட அகத்துல ஒரு பகுதி எப்போதும் கூர்மையா இருக்கறது. நம்மையும் நம்ம சூழலையும் கூர்ந்து கவனிக்கறது. அத கான்ஷியஸ்ஸா செய்யணும்னு இல்லை. சப் கான்ஷியஸா நடக்கும். நம்ம மரபுல ’’சாட்சி பாவம்’’னு சொல்றாங்க.’’
‘’ஒர்க் பிரஷர் ரொம்ப கடுமையானது அண்ணா.’’
‘’மனுஷ உடம்பும் மனசும் உச்சபட்ச நெருக்கடியிலதான் உச்சபட்ச துல்லியத்தோட செயல்படுது’’
‘’நீங்க உங்க கான்செப்ட்டை கன்வின்சிங்கா சொல்லி அக்செப்ட் பண்ண வச்சிருவீங்க. ஆனா அதை எக்ஸிகியூட் பண்றது அவ்வளவு ஈசியா இல்ல’’
‘’நான் யாரையும் கன்வின்ஸ் பண்ண நினைக்கறது இல்ல. உரையாடற எல்லாரோடயும் சேந்து யோசிக்கறன். விவாதிக்கறன்.’’
‘’அண்ணா! நான் என்னோட படைப்புலகத்தை என்னோட அக உலகத்துக்கு நெருக்கமா மட்டுமே வச்சுக்க பிரியப்படறன். நான் பாக்கற உத்யோகம் என்னோட புற உலகம். அது பெருசா பிரம்மாண்டமா நம்மால வகுக்க முடியாததா இருக்கு. அதுல இருந்து என்னோட அக உலகத்தை எவ்வளவு தள்ளி வச்சுக்கிறனோ அந்த அளவுக்கு நல்லதுன்னு நான் பழகியிருக்கன்’’
’’சங்க கவிதைகள்ல அகம் சார்ந்து எழுதன புலவர்கள் தான் புறம் சார்ந்தும் எழுதியிருக்காங்க இல்லையா?’’
ஆதித்யா அமைதியாக இருந்தான்.
நான் சொன்னேன் : ‘’ஆனா அது கிரியேட்டரோட சாய்ஸ்’’
’’நானும் என்னோட தினசரி அனுபவங்கள எழுதலாம்னு சொல்றீங்களா?’’
‘’எழுதுன்னுதான் நான் சொல்வேன்.’’
‘’அது வேற உலகம்’’
‘’அந்த உலகத்தையும் உன்னோட கிரியேட்டிவ் சென்ஸ்ஸால அணுகிப் பாரு. என்ன நடக்குதுன்னு பாக்கலாம்’’
Wednesday, 27 October 2021
இருமை
2003ம் ஆண்டு என்னுடைய பொறியியல் கல்லூரிப் படிப்பை முடித்தேன். எல்லா இளைஞர்களையும் போலவே பெரியவர்களின் உலகத்துக்குள் நுழைந்து விட்டோம் என்பதில் பேருவகை கொண்டிருந்தேன். அனைத்தும் எளிது எனத் தோன்றும் மாயத்தை அனைவருமே இளமையில் உணர்ந்திருப்பார்கள். அதில் நானும் விதிவிலக்கல்ல.
நானும் எனக்கு ஒரு வருடம் முன்னால் கல்லூரிப் படிப்பை முடித்த என்னுடைய சீனியர் ஒருவரும் ஒரு இணைய மையத்துக்குச் சென்றோம். அவர் தீவிரமான பெருமாள் பக்தர். இனிய மனிதர். இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இணையம் அப்போது தான் எங்கள் ஊர் போன்ற நகரங்களில் பரவலாகிக் கொண்டிருந்தது. தமிழ் யூனிகோட் உருவாகி விட்டது என்று ஞாபகம். வெளியூர்களில் - வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம். வாரம் ஒரு நாள் இணைய மையம் செல்வோம். ஒரு மணி நேரம் இணையம் பயன்படுத்த ரூ. 30 கட்டணம் என்று ஞாபகம். அவர் வேலை தேடிக் கொண்டிருந்தார். ரெஸ்யூம் ஃபார்வர்டு செய்வார். நானும் உடன் செல்வேன்.
அப்போது ஊரின் மத்தியில் இருக்கும் வணிக வளாகம் ஒன்றில் இணைய மையம் ஒன்று இருந்தது. அந்த வளாகத்துக்கு உள்ளேயும் கடைகள் உண்டு. வளாகத்தின் வெளிப்பக்கத்திலும் கடைகள் உண்டு. அவையும் அந்த வளாகத்தைச் சேர்ந்தவையே. முதல் தளம் , இரண்டாம் தளம் என இரண்டு தளத்திலும் கடைகள் உண்டு.
நான் என்னுடைய இரு சக்கர வாகனத்தை அந்த வணிக வளாகத்தின் உள்ளிருந்த பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு மாடியை நோக்கி நடந்தோம். நண்பர் என்னிடம் , ‘’ இன்னைக்கு நிறைய வேலை இருக்கு. கொஞ்சம் டைம் ஆகும். நாம ஒரு பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கிப்போமா?’’ என்றார். வளாகத்தின் வெளிப்பக்கத்தில் இருந்த பேக்கரியை நோக்கி செல்லத் துவங்கினோம்.
வளாகத்தின் காவலாளி எங்களிடம் வந்து ‘’சார் ! வெளிய போறீங்கன்னா வண்டியை இங்க பார்க் பண்ணாதீங்க. வண்டியை எடுத்துட்டு போய்டுங்க’’ என்றார்.
‘’நாங்க உங்க காம்ப்ளக்ஸூக்கு வந்திருக்கோம். உங்க காம்ப்ளக்ஸூக்கு வெளிப்பக்கம் இருக்கற பேக்கரிக்கு இப்ப போகப் போறோம். எங்க கிட்ட நீங்க எப்படி இந்த மாதிரி சொல்ல முடியும்?’’
’’அவுட்சைட் வெஹிக்கிள் அதிகம் இங்க பார்க் பண்றாங்க. அத அவாய்ட் பண்ண தான் சார் இப்படி சொல்றோம்’’
‘’உங்களுக்கு காம்ப்ளக்ஸ் மெயிண்டய்ன் பண்றதுல்ல ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதெல்லாம் நீங்க தான் சால்வ் பண்ணிக்கணும். உங்க இடத்துக்கு வந்த கஸ்டமர் கிட்ட இப்படித்தான் பிஹேவ் பண்ணுவிங்களா?’’
‘’சார்! எனக்கு சொல்ற வேலையை நான் செய்றன். அவ்வளவுதான்’’
நான் அந்த இடத்தில் ஸ்திரமாக நின்று விட்டேன். ‘’ உங்க ஓனரை இங்க வரச் சொல்லுங்க. நான் அவர்கிட்ட நடந்ததைச் சொல்லி ஒரு கஸ்டமர் கிட்ட உங்க ஸ்டாஃப் நடந்துகிட்டது சரியான்னு கேக்கறன். அத கேக்காம நான் இங்கிருந்து நகர மாட்டேன்.‘’
நண்பர் என்னிடம் ‘’இஸ்யூ எதுவும் வேண்டாம் பிரபு. நாம இங்கயிருந்து வேற பிரவுஸிங் செண்டர் போயிடுவோம். லெட் அஸ் ஃபர்கெட் திஸ்’’ என்றார்.
’’என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க. ஒரு வணிக நிறுவனம் யாருக்காக நடத்துறாங்க? கஸ்டமருக்காகத்தானே? ஓனருக்கு இங்க என்ன நடக்குதுன்னு தெரியணும். ஓனர் இங்க வரணும். ஓனரைப் பாக்காம நான் இங்கிருந்து நகர மாட்டேன். ‘’
வணிக வளாகமே என்ன நடக்கிறது எனப் பார்த்துக் கொண்டிருந்தது.
சில நிமிடங்களில் மோட்டார்சைக்கிளில் ஒரு மனிதர் வளாகத்தினுள் நுழைந்தார். வண்டியை பார்க் செய்து விட்டு எங்களிடம் வந்தார். மிகவும் பணிவாக, ‘’நான் தான் சார் இந்த காம்ப்ளக்ஸ் மேனேஜர். வீட்டில இருந்தன். காம்ப்ளக்ஸ்ல இருந்து ஃபோன் வந்தது. என்னன்னு பாக்க உடனே வந்திருக்கன். என்ன விஷயம் சொல்லுங்க’’ என்றார்.
நண்பர் விஷயத்தைச் சொன்னார்.
‘’தப்பு எங்க செக்யூரிட்டி மேல தான் சார். நடந்த தப்புக்கு நான் மன்னிப்பு கேக்கறன். செக்யூரிட்டிய நான் தனியா கண்டிக்கறன்.’’
நான் , ‘’உங்க ஓனர் எப்ப வருவார்? அவர் கவனத்துக்கும் விஷயத்தைக் கொண்டு போகணும்.’’ என்றேன்.
‘’அவர் ஃபாரின்ல இருக்கார் சார். மூணு வருஷத்துக்கு ஒரு தடவை தான் வருவார். நான் தான் இங்க ஃபுல் இன்சார்ஜ். நான் உங்க கிட்ட மன்னிப்பு கேக்கறன்.’’
நண்பர் என் தோளில் கையைப் போட்டு என்னை பேக்கரிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் முதல் தளத்தில் இருந்த இணைய மையத்துக்கும் சென்றோம்.
சில ஆண்டுகள் ஓடின.
எனது நண்பர் ஒருவர் அந்த வளாகத்தில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நான் அந்த கடையில் அவருடன் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்போது அந்த வளாகத்தின் மேனேஜர் நண்பரின் கடையைக் கடந்து சென்றார். அவர் கடந்து சென்றதும் என்னிடம் இவர்தான் இந்த வளாகத்தின் உரிமையாளர் என்று சொன்னார்.
‘’இவர் ஓனர் கிடையாதுங்க. மேனேஜர். ஓனர் ஃபாரின்ல இருக்கார்’’ என்றேன்.
’’இவர் மேனேஜர்னு உங்க கிட்ட யார் சொன்னது?’’
‘’அவரே தான் என்னிடம் சொன்னார்’’. நான் சம்பவத்தை விளக்கினேன்.
நண்பர் யோசித்துப் பார்த்து விட்டு, ‘’அந்த நேரத்துல உங்களை சமாதானப்படுத்த ஓனர் தன்னை மேனேஜர்னு சொல்லியிருக்கார். ஓனர் தான் தான்னு சொல்லியிருந்தா நீங்க இன்னும் கொஞ்சம் கடுமையா ரியாக்ட் பண்ணி இருப்பீங்க. அத அவாய்ட் பண்ண இப்படி சொல்லியிருக்கிறார்’’ என்றார்.
இரு உரையாடல்கள்
Sunday, 24 October 2021
ஒரு வாசிப்பு
இன்று ஒரு மேற்கத்திய நாவலை வாசித்தேன். மரணத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டது. மிகக் குறைவான கதாபாத்திரங்கள். ஐரோப்பிய அகம் மரணத்தைக் கண்டு எப்போதும் அஞ்சியே இருந்திருக்கிறது. அந்த அச்சம் அவர்களுக்கு வாழ்க்கை மேலும் படர்ந்த படி இருக்கிறது. அது அவர்களை மரணம் குறித்த மர்மப்படுத்தலை மேலும் மேலும் என உருவாக்கச் செய்கிறது.
ஜீவனின் நெடிய பயணத்தில் ஒரு ஜென்மம் என்பது குறிப்பிட்ட கால அளவே என்கிறது இந்திய மரபு. அந்த குறுகிய காலத்தில் தம் அருஞ்செயல்களால் விடுதலை பெற்றவர்கள் உண்டு. பல பிறவிகளில் - பல ஜென்மங்களில் - பிறந்து இளைத்தவர்கள் உண்டு.
சாவு கொண்டாடப்படும் காசி மாநகரமே ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆராதிக்கும் நகராக இருந்திருக்கிறது.
Saturday, 23 October 2021
முன்னே உள்ள பாதை
Thursday, 21 October 2021
நீங்குதல்
மூன்று வாரங்களாக பால், தேனீர், காஃபி என மூன்றையும் நீங்கியுள்ளேன். வெகு நாள் பழகிய பழக்கம் ஒன்றிலிருந்து நீங்குதல். இளம் வயதில் மூன்று நான்கு முறை இவற்றைத் தவிர்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் மூன்று நான்கு ஆண்டுகள் நீடித்திருக்கிறது. பின்னர் பல காரணங்கள். கட்டுமானப் பணி நடக்கும் போது பணி இடத்தில் தேனீர் ஒரு நாளைக்குப் பலமுறை சுழன்று கொண்டிருக்கும். தவிர்ப்பது சிரமம். சமீப காலங்களில், பலமுறை முயன்று தோல்வி அடைந்தேன். இப்போது வாய்த்திருக்கிறது. தேனீர் அருந்தும் நேரங்களில் வென்னீர் குடித்துக் கொள்கிறேன். பால் தேனீரை இப்போது நினைத்தால் எப்படி இவ்வளவு அடர்த்தியான திரவத்தை குடலுக்குள் கொண்டு செல்வது என்று தோன்றுகிறது. பால் தேனீரை நிறுத்தி விட்டு காலையில் ஒருமணி நேரம் நடைப்பயிற்சி செய்யத் துவங்கினேன். உடல் எடை குறைய ஆரம்பித்து விட்டது. காலை மாலை நேரங்கள் காலியான வயிறாக இருப்பதால் யோகாசனங்களும் செய்ய முடிகிறது. நல்ல பசி எடுக்கிறது. ஆழமான நிம்மதியான தூக்கம்.
ஊக்கம் கொண்ட மன அமைப்பு கொண்டவர்கள் நிச்சயம் சிறிய அளவிலாவது உடலுக்கு உழைப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். மனித உடல் என்பது தினசரி குறைவான நேரமாவது வியர்க்க வேண்டும். அது ஒரு எந்திரம் போல. எந்திரத்தின் எல்லா பகுதிகளும் அவற்றுக்கு உரிய பணிகளுடனும் ஒருங்கிணைப்புடனும் இருக்க வேண்டும். நவீன வாழ்க்கை உடலை பின்னுக்குத் தள்ளி மனத்தை முன்னே கொண்டு வந்து விட்டது. மனம் உடலளவுக்கு ஸ்தூலமானது அல்ல எனினும் அதன் எவ்விதமான அலைவும் உடல் உறுப்புகளைப் பாதிக்கும். வலிமை கொண்ட உடல் வாழ்க்கையை மிக எளிதாக அணுகும். ஆரோக்கியமான உடல் என்பது நாம் அடையச் சாத்தியமான ஆகச் சிறந்த லாபம் என்கிறது மகாபாரதத்தின் யட்சப் பிரசன்னம்.
வயலில் பாய்ச்சல்காலில் நீர் பாய்வது ஓசை எழுப்புவது போல நடைப்பயிற்சிக்குப் பின் நாள் முழுவதும் காலில் பாயும் குருதியின் ஓசையை மானசீகமாக கேட்க முடிகிறது.
மனம் பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டுள்ளது. தொழில் நிமித்தமான பணிகள். சமூகம் சார்ந்த பணிகள். படைப்புச் செயல்பாடுகள். அவை அனைத்துக்கும் பால் தேனீரை நீங்கியதும் நடைப்பயிற்சி , யோகா செய்வதும் உதவியாக உள்ளது.
Wednesday, 20 October 2021
பாராட்டு
Saturday, 16 October 2021
தழல்
Friday, 15 October 2021
துவக்கம்
Wednesday, 13 October 2021
காலைப் பொழுதுகள்
Monday, 11 October 2021
கொலு
Thursday, 7 October 2021
ஆண்டவன் கட்டளை
Wednesday, 6 October 2021
இந்திய வழி
Tuesday, 5 October 2021
தேவி
Saturday, 2 October 2021
நிறைநிலவுச் சந்திப்புகள் - ‘’காவிரி போற்றுதும்’’