Tuesday, 30 November 2021
நிறை
Monday, 29 November 2021
நன்றி
சமூக வாழ்க்கை என்பது கூட்டு வாழ்க்கையே. உயிர்கள் அனைத்தையும் சமமாகக் காண்பது என்பதே இந்தியப் பண்பாடு உலகுக்கு அளித்த கொடை. மேலான சக வாழ்வை நோக்கி நகர்வதே மானுட விடுதலையாக இருக்க முடியும்.
மழைநீர்
Saturday, 27 November 2021
மரபு
Friday, 26 November 2021
வாசகர்
Thursday, 25 November 2021
நர்மதை நதி வலம்
Wednesday, 24 November 2021
சைக்கிள்
Tuesday, 23 November 2021
செலவு (சிறுகதை)
Monday, 22 November 2021
ஓவியம்
சைக்கிள் பயணம்
Sunday, 21 November 2021
கடிதங்கள்
Saturday, 20 November 2021
ஆதிமூலம்
நர்மதா பரிக்கிரமா
செய்க பொருளை
Thursday, 18 November 2021
மீண்டும் (நகைச்சுவைக் கட்டுரை)
கூடித் தொழில் செய்
Wednesday, 17 November 2021
ஆறாவது நாள்
இன்று ஆறாவது நாள்.
சில விஷயங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளும் போது, நம் மனம் அவற்றை முழுக்க உள்வாங்குகிறது. முழுமையாக ஒன்று அறியப்படும் போது அது எளிதில் கைகூடுகிறது. செய்யும் செயலில் முழுதாக ஈடுபட வேண்டும். எண்ணத்தையும் கவனத்தையும் வேறு எங்கும் சிதற விடாமல்.
நேற்று உணவளிக்கச் செல்லும் போது, அங்கே இருந்த மக்கள் அவர்கள் தெருவில் இருக்கும் பழைய சப்தமாதா கோவிலை புதிதாகக் கட்டித் தருவதில் ஏதேனும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டனர். நான் அது குறித்து சிந்திக்கிறேன் என்று சொன்னேன். நேற்றும் இன்றும் அது பற்றி யோசித்தேன்.
இந்திய நிலமெங்கும் சப்த கன்னியர் வழிபாடு உண்டு. இறையின் அம்சம் கொண்ட இறைத்தன்மை மிக்க ஏழு கன்னிப் பெண்கள். கன்னிமையில் வேர் கொண்டிருக்கும் இறைத் தன்மைக்கு அளிக்கப்பட்ட உருவங்கள். பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி,வராகி, இந்திராணி, சாமுண்டி என்ற ஏழு தெய்வங்கள். ஆதி பராசக்தியின் கன்னி ரூபங்கள். வெண்ணிற உடை உடுத்து ஸ்படிக மாலையைக் கரத்தில் ஏந்தியிருக்கும் பிராம்மி முதல் கபால மாலை அணிந்து பிணத்தின் மேல் அமர்ந்திருக்கும் சாமுண்டி வரை. ஞானம், சக்தி, ஆற்றல், செல்வம்,வளர்ச்சி, வல்லமை, அஞ்சாமை ஆகிய இயல்புகளின் தெய்வங்கள்.
இன்று கிராம மக்களிடம் ஒரு விஷயம் சொன்னேன். அந்த தெருவில் இருக்கும் குறைந்தபட்சம் 50 பெண்கள் இப்போது இருக்கும் சப்தமாதா ஆலயத்தில் நாற்பத்து எட்டு தினங்களுக்கு மாலை 5.50 முதல் 6.10 வரை ’’அபிராமி அந்தாதி’’ பாராயணம் செய்யச் சொன்னேன். சிறுமிகள், இளம் பெண்கள், மூதாட்டிகள் என எவரும் பங்கு பெறலாம். சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட - மக்களுக்குள் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் ஏற்பட இது வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை. அவ்வாறு அவர்களுக்குள் ஓர் ஒருங்கிணைப்பு ஏற்படுமானால் அவர்கள் எழுப்ப விரும்பும் ஆலயம் விரைவில் எழக் கூடும்.
‘’அபிராமி அந்தாதி’’ தமிழின் சிறந்த நூல்களில் ஒன்று. தமிழின் சிறந்த நூல் ஒன்றை 50 பேரிடம் கொண்டு சேர்த்ததாகவும் இருக்கும். அவர்கள் நோக்கமும் நிறைவேறும். எனக்கு ஒரு எண்ணம் உண்டு. நம் மரபில் , காலை எழுந்தவுடன் சொல்லக் கூடிய ஒரு சுலோகம் உண்டு. ‘’கராக்ரே வசதே லஷ்மி’’ எனத் தொடங்குவது. நீராடும் போது சொல்லக் கூடிய சுலோகம் உண்டு. கங்கேச யமுனா’’ . உணவருந்தும் முன் சொல்லக் கூடிய சுலோகம் உண்டு. ‘’பிரம்மார்ப்பணம் பிரம்ம ஹவிர்’’ . அவ்வாறே மாலை அந்தியில் , இரவு உறங்கப் போகும் முன் என சொல்லப்படும் சுலோகங்கள் உண்டு.
காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளைப் பார்த்து சொல்லும் ‘’கராக்ரே வசதே லஷ்மி ‘’ என்ற சுலோகம் கைகளே நம் கடவுள் என்கிறது. மனிதக் கையால் நுட்பமான பல வேலைகளைச் செய்ய முடியும். கைகளுக்கு அந்த நுட்பம் கூடிய பின்னரே மானுடம் மகத்தான தாவலை தன் பரிணாமத்தில் எட்டியது. நதிகளே உணவாகவும் நீராகவும் மாறி வாழ்வளிக்கின்றன. மனித வாழ்க்கை என்பது சக ஜீவன்களுடன் இணைந்து வாழ்வதே. முழுமையான இணைவும் ஒத்திசைவும் ஏற்படும் போது மானுடம் முழுமை பெறும்.
தமிழ்ச் சமூகத்தில், மரபின் மேல் கடும் தாக்குதல் நூறாண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. சமயத்தின் மேல், இலக்கியத்தின் மேல், பாரம்பர்யமான அறிவியல் அறிவின் மேல் என அது விரிந்து கொண்டே செல்கிறது. இப்போது, இங்கே யாருக்குமே மரபின் மீதான பயிற்சி கிடையாது. அத்தகைய அறிமுகமும் பயிற்சியும் இங்கே அளிக்கப்பட வேண்டும். அதற்கு இவ்வகையான முன்னெடுப்புகள் உதவும் என்பது எனது நம்பிக்கை.
நான் நாடெங்கும் பயணம் செய்திருக்கிறேன். இந்த கணம், நான் சென்ற எண்ணற்ற ஊர்களின் ஆலயங்களை எண்ணிப் பார்க்கிறேன். காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், லெபாக்ஷி வீரபத்ரர் ஆலயம், மந்த்ராலயம் ராகவேந்திர சுவாமி அதிஷ்டானம், ஓம்காரேஷ்வர், உஜ்ஜைனி மகா காலேஸ்வரர், ரிஷிகேஷின் கங்கை அன்னை என எத்தனையோ இடங்கள். பெண்கள் தங்கள் குடும்பத்துக்காக குழந்தைகளுக்காக கணவனுக்காக எனக் கடவுளிடம் வேண்டிக் கொண்டு பிராத்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். பெண் எப்போதும் மற்றவர்களுக்காகவே பிராத்திக்கிறாள். அதனால் தான் இந்திய மரபு பெண்மையை தெய்வ சொரூபமாக வணங்குகிறது.
நிகழ்வில் பங்கேற்கும் பெண்களை, அந்த ஆலயத்தில் நாற்பத்து எட்டு நாட்களும் ஆளுக்கு ஒரு தீபம் ஏற்றச் சொல்லலாம். கார்த்திகை மாதம் தீபங்களின் மாதம். நவீன வாழ்க்கை மனிதனை வெறும் நுகர்வோனாக மட்டுமே இருக்கச் செய்ய விழைகிறது. மரபு வாழ்க்கைக்கு வெவ்வேறு விதமான தன்மைகளை கூறுகளை அம்சங்களை அளித்தவாறே உள்ளது.
எழுத்துக்கள் ‘’அ’’ என்ற எழுத்தை அடிப்படையாகவும் முதலாகவும் கொண்டிருப்பது போல செயல்களில் முதற் செயல் தீபம் ஏற்றுதல். மானுட வரலாற்றில் தீயை மனிதன் பயன்படுத்தத் தொடங்கிய பின் தான் அவன் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழத் தொடங்கின. தீபம் ஏற்றுதல் அனாதி காலமாகத் தொடரும் ஒரு மரபு.
சக மனிதர்கள் மேல் என்றும் கொண்டிருக்கும் நம்பிக்கையின் வலிமையில் இந்த பணியை முன்னெடுக்கவும் ஒருங்கிணைக்கவும் உள்ளேன்.
Tuesday, 16 November 2021
ஐந்தாம் நாள்
Monday, 15 November 2021
நான்காம் நாள்
மூன்றாம் நாள்
Saturday, 13 November 2021
இரண்டாம் நாள்
தமிழ்நாட்டில் ஒரு பொதுவான நம்பிக்கை உண்டு. முதல் நாள் பணியைப் போலவே இரண்டாம் நாள் பணியும் முக்கியமானது என. முதல் நாள் உருவாக்கித் தரும் துவக்க வேகத்தை முன்னெடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை இரண்டாம் நாளில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இன்று காலை கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள எனது நண்பரிடம் முதல் நாள் விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் எண்ணம். நான் சென்ற போது அவர் பூஜை செய்து கொண்டிருந்தார். ஐம்பது ஆண்டுகளாக காலையில் இருபது நிமிடங்கள் பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு எண்பது வயது. கூடத்தில் ஒரு பகுதி பூஜை அறை. நான் அமைதியாக அமர்ந்திருந்து யோசித்துக் கொண்டிருந்தேன்.
பூஜை முடித்து விட்டு நண்பர் வந்தார். நண்பரின் வீட்டுக்கார அம்மா எனக்கு ஒரு தஞ்சாவூர் ஃபில்டர் காஃபி கொண்டு வந்தார்கள். அவர்களுடைய சொந்த ஊரே தஞ்சாவூர்.
‘’அம்மா! இன்னையோட சரியா 43 நாள் ஆகுது காஃபி, டீ, பால் தவிர்த்து. இருந்தாலும் பிரியமா கொண்டு வந்துட்டீங்க. பரவாயில்லை’’
கையில் பூஜைத்தட்டுடன் கோயிலுக்குப் புறப்பட்டார்.
‘’என்னம்மா வழக்கமா சாயந்திரம் தானே கோயிலுக்குப் போவீங்க. இன்னைக்கு என்ன காலையிலயே?’’
’’இன்னைக்கு குருப்பெயர்ச்சி’’
‘’ஓ அப்படியா’’
நண்பர் நேற்று நடைபெற்ற பணி குறித்து கேட்டுக் கொண்டிருந்தார். சட்டென தனது சொந்த அனுபவம் ஒன்றை என்னிடம் சொன்னார்.
‘’என்னோட அப்பா ரொம்ப கரடுமுரடானவர் பிரபு. கடுமையானவர். அவர பாத்து வளந்ததால நான் எந்த விதமான ஹார்டுனெஸ்ஸையும் மனசுல வச்சுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணன். சாஃப்ட்டா இந்த உலகத்தை அணுகிறவங்க தான் வலிமையானவங்க. இத்தனை வருஷ வாழ்க்கையில நான் உணர்ந்த விஷயம் இது’’
சமையல்கட்டில் வாணலியில் ஏதோ பொறியும் சத்தம் கேட்டது.
‘’சார் அம்மா வாணலியில எதையோ வச்சுட்டு போயிருக்காங்க’’
அவர் சமையல் கட்டுக்குள் சென்றார்.
‘’அவங்களுக்கும் வயசாகுதில்லையா. மறந்திட்டாங்க. எப்படி உங்களுக்கு மட்டும் சத்தம் கேட்டது தெரிஞ்சது?’’
’’சார் நேத்து முழுக்க ஃபுட் பிரிபேர் பண்ண இடத்துல இருந்திருக்கன். வாணலி சூடாகி அதில் உணவுப் பொருள் இருந்தா என்னென்ன மாதிரி சத்தம் போடும்னு நேத்து முழுக்க அந்த சத்தங்களை கேட்டுக்கிட்டு இருந்தன்.’’
கொஞ்ச நேரம் ஆனது.
நண்பரின் மனைவி வந்தார். அவர் உள்ளே நுழைந்ததுமே , ‘’அம்மா ! எண்ணெய் சட்டி அடுப்பில இருக்கும் போது ஆஃப் பண்ணாம கோயிலுக்குப் போய்ட்டீங்க. சார் தான் ஆஃப் செஞ்சார்’’ என்றேன்.
அவர் சமையல்கட்டுக்குள் அவசரமாக சென்றார்.
‘’பிரபு ! நான் ஸ்கூல் படிக்கும் போது படிச்ச ஒரு திருக்குறள் என் மனசை பாதிச்சுது. அதுல இருந்து நான் மாமிசம் சாப்பிடறதை நிறுத்திட்டேன். எங்க வீட்ல எல்லாரும் மாமிச உணவு சாப்பிடறவங்க. எங்க அம்மா எனக்கு மட்டும் சைவ உணவு கொடுக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. பல நாள் அவங்களை சிரமப்படுத்த வேணாம்னு மோர் சாதம் மட்டுமே சாப்பிடுவேன். எனக்கு கல்யாணம் ஆன பிறகு எனக்காக ஒய்ஃபும் மாமிசம் சாப்பிடறதை நிறுத்திட்டாங்க.’’
நான் வாழ்க்கைக் காட்சிகளின் சம்பவங்களின் நூதனம் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன்.
‘’சார் ! எனக்கு ஒரு ஐடியா இருக்கு. அத நீங்க தான் எக்ஸிகியூட் பண்ணனும்’’
‘’என்ன விஷயம்?’’
‘’நான் இங்க ஒரு மீட்டிங் அரேன்ஞ் செய்யறன். நூறு பெண்கள் கலந்துக்கற மாதிரி. நீங்க இத்தனை வருஷமா செய்யற பூஜையைப் பத்தி நீங்க ஸ்பிரிச்சுவாலிட்டின்னு உணர விஷயங்கள் பத்தி அவங்களுக்குச் சொல்லுங்க’’
‘’நான் ரொம்ப சாதாரண ஆள் பிரபு’’
‘’சாதாரணமானவங்க எந்த விஷயத்தையும் சரியா புரிஞ்சவங்களா கூட இருப்பாங்க சார்’’
‘’நாம சமயப் பிரச்சாரம் செய்யற யாரையாவது கூப்ட்டு மீட்டிங் அரேஞ்ச் செய்வோம்’’
‘’இல்லை சார் ! நீங்களே பேசுங்க. நீங்க விவசாயி. இந்த ஊர்ல இருக்கற நிறைய பேரு உங்களுக்கு சொந்தக்காரங்க. நீங்க சொல்ற விஷயங்களை ஆர்வமா கேட்பாங்க. நூறு பேர்ல பத்து பேரு நீங்க சொல்ற விஷயங்களை கன்சிடர் பண்ணாக் கூட அதுவே பெரிய சக்ஸஸ் சார்’’
நண்பருக்கு நான் என்ன சொல்கிறேன் என்பது முழுதும் பிடிபடவில்லை.
‘’சார் ! ஒரு திருமந்திரப் பாடல் இருக்கு.
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே
நீங்க கேட்டிருப்பீங்க. முதல் லைன் பூஜை - ஆலய வழிபாடு போன்ற வழிமுறைகள் தொடர்பானது. ரெண்டாவது லைன் நம்மோட சக ஜீவன்கள் மேல காட்டுற பிரியம் அன்பு தொடர்பானது. மூணாவது லைன் சக மனுஷங்கள் மேல நாம எடுத்துக்கற பொறுப்பு அக்கறை அன்பு தொடர்பானது. கடைசி லைன் நம்மோட சோஷியல் இண்டெலிஜென்ஸ் தொடர்பானது. இந்த நாலுமே உங்க லைஃப்ல இருக்கு. உங்களுக்கு சாத்தியம் ஆனது எல்லாருக்கும் சாத்தியம் தான். இந்த நாலும் ஒவ்வொருத்தருக்கும் சாத்தியம் ஆகணும்னு கட்டாயம் இல்லை. நாலுல ஒன்னு அவங்களுக்கு ஓப்பன் ஆனாலோ பிராக்டிஸ் ஆனாலோ அதுவே கிரேட் திங்’’
நண்பர் என்னிடம் ‘’உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு. நீங்களே பேசுங்க.’’ என்றார்.
’’நாம டிஸ்கஸ் பண்ணி என்ன விஷயம் பேசனும்னு முடிவு பண்ணுவோம். நீங்க பேசுங்க. அதான் கரெக்ட்டா இருக்கும்.’’
நண்பர் சம்மதித்தார்.
‘’மீட்டிங்கை நான் டிசைன் செய்றன். ஆலயத் தூய்மை, எறும்புகளுக்கும் காக்கை பட்சிகளுக்கும் உணவிடுதல், தீப வழிபாட்டின் தொன்மை, சக மனுஷங்க கிட்ட கனிவா நடந்துக்கறது, வீட்டுல மலர்ச்செடிகளை வளக்கறது , மரம் வளக்கறதுன்னு இந்த விஷயங்களை நீங்க பேசணும். இந்த மாதிரி விஷயங்கள் தான் சார் நம்ம நாட்டோட ஆன்மீகம்’’
நண்பர் ஆமோதித்தார்.
‘’மீட்டிங் முடிஞ்சு அவங்க போகும் போது ஒவ்வொருத்தருக்கும் ஒரு வன்னி மரக் கன்னு கொடுத்து வீட்டுல வச்சு வளர்க்க சொல்லுவோம். ஒரே நாள்ல நூறு மரக்கன்னு ஊர்ல பிளாண்ட் ஆகும்’’
அடுத்த திட்டம் உருவான மகிழ்ச்சியுடன் புறப்பட்டேன்.
இன்று 500 பேருக்கு கிச்சடி செய்து எடுத்துக் கொண்டு மாலை 5.30க்கு கிராமத்துக்குச் சென்று வினியோகித்தோம். கல்லூரிப் பேராசியரான எனது நண்பரும் உடன் வந்து வினியோகித்தார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அரைமணி நேரத்தில் கொண்டு சென்ற உணவு தீர்ந்தது. வீடு திரும்பும் போது, நண்பர் நாளை எலுமிச்சை சாதம் அல்லது வெஜிடபுள் சாதம் செய்து கொண்டு செல்வோம் என்றார்.
Friday, 12 November 2021
முதல் நாள்
Thursday, 11 November 2021
அன்னபூரணி தேசம்
பாரத மண் மகத்தான எத்தனையோ பண்பாட்டு விழுமியங்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர் கண்ணியாக நிலைநிறுத்தியிருக்கிறது. இயற்கையை இறைமையாகப் பார்த்தல், ஜீவன்களின் மீது கருணையோடிருத்தல், உயிர்களின் துன்பத்தைப் போக்குதல் என பல்வேறு விழுமியங்களை தலைமுறைகளின் மனதில் பதிய வைத்திருக்கிறது பாரதம். வாழும் உயிர்களுக்கெல்லாம் உணவிடுதலை அறம் என்கிறது நம் மரபு. அதனைப் பேரறம் எனவும் பறைசாற்றுகிறது.
Tuesday, 9 November 2021
பிரம்மார்ப்பணம்
இங்கே சென்ற வாரத்திலிருந்து மழை பொழிந்து கொண்டிருக்கிறது. பகலில் வானம் வெளி வாங்கவே இல்லை. இரவில் சில நாட்கள் சில மணி நேரங்கள் மழை இல்லாமல் இருக்கிறது. நள்ளிரவுக்குப் பின் மீண்டும் மழை தொடங்கி விடுகிறது. கிராமத்தில் இருக்கும் விவசாயத் தொழிலாளர்களின் குடிசை வீடுகள் தொடர் மழையால் தீவிர பாதிப்புக்குள்ளாகும். தரையில் ஈரம் ஊறும். கூரையில் இருக்கும் இடைவெளிகளின் வழியே மழைநீர் ஒழுகும். எரிபொருளாக வைத்திருக்கும் விறகுகள் நனைந்திடும். வீட்டு வாசல் சாலை சேறாகியிருக்கும். ஓரிரு நாள் மழை பொழிந்து அடுத்த சில நாட்கள் வெயில் இருந்தால் சமாளித்து விடுவார்கள். தொடர் மழையை எதிர்கொள்வது என்பது அவர்களுக்கு சற்றே கடினமான ஒன்று. கையில் சேமிப்பாக ஏதேனும் இருக்க வேண்டும். 99.99% எவரிடமும் எந்த சேமிப்பும் இருக்காது. மழை பொழியும் காலத்தில் விவசாய வேலைகள் எவையும் இருக்காது. நடவு, களையெடுப்பு, அறுவடை என எந்த பணிக்கும் வாய்ப்பு இருக்காது. கடினமான சூழ்நிலையை பல வருட பழக்கத்தால் கடந்து செல்ல பழகியிருப்பார்கள்.
தடுப்பூசிக்காக செயல் புரிந்த கிராமத்தின் குடிசைப்பகுதிகள் என் நினைவில் எழுந்தன. தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட போது அப்பகுதிகளின் நிலை என் மனதில் பதிவாகியிருந்தது. கடலூர் வெள்ளத்தின் போது, பல கிராமங்களில் ஒவ்வொரு குடிசை வீடாகச் சென்று அந்த வீடுகளின் சிரமங்களை நேரில் அறிந்த அனுபவம் இங்கே என்ன விதமான சூழல் நிலவும் என்பதை எனக்கு உணர்த்தியது. கிராமத்தில் இருக்கும் எனது நண்பர்களுக்கு ஃபோன் செய்தேன். குடிசைப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக நண்பர்கள் கூறினார்கள்.
கொஞ்ச நேரம் யோசித்தேன். என் உள்ளுணர்வு ஏதேனும் ஒரு செயலை முன்னெடுக்கச் சொன்னது.
கிராமத்தின் நண்பருக்கு ஃபோன் செய்தேன்.
’’ரொம்ப மோசமான பாதிப்பு 100 குடும்பத்துக்கு இருக்குமா?’’
‘’இருக்கும்ங்க’’
‘’நூறு குடும்பம்னா - குடும்பத்துக்கு 5 பேருன்னு வச்சுக்கிட்டா கூட 500 பேர். நாம ஒன்னு செய்யலாம். நான் ஃபிரண்ட்ஸ்கிட்ட பேசறன். உதவி கேக்கறன். அந்த 500 பேருக்கும் ஒரு நாளைக்கு ரெண்டு வேளை ஃபுட்-ன்னு ஆறு நாளைக்கு சப்ளை செஞ்சுடலாம்.’’
‘’6000 ஃபுட் பாக்கெட் . பட்ஜெட் ஹெவியா ஆகுமே?’’
‘’பகவான் மேல பாரத்தைப் போட்டு ஆரம்பிப்போம்.’’
‘’ராமா கிருஷ்ணா ஆண்டவா’’ என்றார் நண்பர்.
சிறிது நேரத்தில் கல்லூரிப் பேராசிரியராய் இருக்கும் எனது நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் சமையல் கலை அறிந்தவர். அவரே பிரமாதமாகச் சமைக்கக் கூடியவர்.
‘’ஒரு நாளைக்கு ரெண்டு வேளை மீல்ன்னா காலைல 8 மணிக்கு ஒன்னு. சாயந்திரம் 5.30க்கு ஒன்னு. இந்த டைமிங் சரியாக இருக்கும் ‘’ என்றார்.
‘’என்ன ஃபுட் சப்ளை செய்றது?’’
‘’காலைல புளி சாதம். சாயந்திரம் கிச்சடி’’
‘’இங்கே ஃபுட் பிரிபேர் பண்ணி பேக் பண்ணிடுவோம். கிராமத்துக்குப் போய் அங்க இருக்கற ஒவ்வொரு குடிசை வீட்டுக்கும் நேரடியா கொடுத்துடுவோம். அது தான் ஈசியான வே’’
‘’எப்ப ஆரம்பிக்கலாம்?’’
‘’நாளைக்கு வில்லேஜ் போய் அங்க இருக்கற ஃபிரண்ட்ஸ்கிட்ட பேசிட்டு வரேன். அவங்க அபிப்ராயம் தெரிஞ்சுகிட்டு டேட் ஃபிக்ஸ் பண்ணிடுவோம்’’
’’பட்ஜெட் தாங்குமா?’’
‘’காட் இஸ் கிரேட்’’
நண்பர் சென்றவுடன் ஆதித்யாவுக்கு ஃபோன் செய்தேன். அவன் வங்கியிலிருந்து புறப்படும் தருவாயில் இருந்தான்.
‘’சொல்லுங்க அண்ணா’’
‘’தம்பி. நான் சொல்ற எதையும் நீ மறுத்தது கிடையாது. எங்கிட்ட எந்த விஷயம் பத்தியும் நெகடிவ்வா பேசுனது கிடையாது. என் கிட்ட கோபப்பட்டது கிடையாது. இவ்வளவு இருந்தும் எனக்கு உன்கிட்ட சில விஷயத்தை சொல்லும் போது மனசு கஷ்டப்படுது’’
‘’ஏன் அண்ணா இப்படி ஃபீல் பண்றீங்க. என்ன விஷயம்னு சொல்லுங்க’’
‘’நீ ஒருத்தன் தான் நான் கிரியேட்டிவ் ஒர்க்குக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை பொது வேலைகளுக்கு கொடுத்திடறன்னு வருத்தப்படுறவன். ‘’
’’அது வருத்தம்னு சொல்ல முடியாது. இன்னும் நிறைய நீங்க எழுதணும்ங்கற விருப்பத்தைத்தான் அப்படி சொல்லியிருப்பன். பரவாயில்லை. நீங்க சொல்ல வந்த விஷயத்தை சொல்லுங்க. ‘’
‘’நாம ஒரு கிராமத்துல வாக்சினேஷனுக்காக ஒர்க் பண்ணோம்ல அந்த கிராமம் இப்ப மழையால ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கு. அங்க இருக்கற 500 பேருக்கு 6 நாளைக்கு சாப்பாடு போடனும்’’
‘’நல்ல விஷயம் தான் அண்ணன் செஞ்சுடலாம். இப்ப அங்க அவ்வளவு மழையா?’’
‘’இந்த விஷயத்துல கொஞ்சம் கூட இருந்து சப்போர்ட் பண்ணு’’
‘’என் சப்போர்ட் உங்களுக்கு எப்பவும் எல்லா விஷயத்துலயும் உண்டு’’
நான் திட்டமிடல் என்ன என்பதை அவனிடம் விளக்கினேன்.
‘’இன்னும் ஒன் ஆர் டூ டேஸ்ல நாம ஆரம்பிக்கணும். நீ இந்த விஷயத்துக்குள்ள பல பேரை இன்குளூட் செய்யணும். ‘’
‘’செஞ்சுடலாம்ணா’’
‘’அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய் போல் போற்றாக் கடை- ன்னு ஒரு திருக்குறள் இருக்கு. அடுத்த உயிரோட துன்பத்த தன்னோட துன்பமா நினைக்கறது தான் அறிவோட லட்சணம்னு வள்ளுவர் சொல்ராரு. ‘’
‘’இந்த திருக்குறள் கேட்டிருக்கேண்ணா. நான் வீட்டுக்கு போய்ட்டு ஃபோன் செய்றன்’’
கல்லூரிப் பேராசிரியர் ஃபோன் செய்து , ‘’பிரபு ! நான் சொல்ற விஷயங்களை நோட்ல குறிச்சு வச்சுக்க.’’ என்றார்.
நான் நோட்டில் பேனாவால் குறித்துக் கொண்டேன்.
‘’அரிசி 600 கிலோ. ரவா 300 கிலோ. கடலை எண்ணெய் 120 லிட்டர். காய்கறி (கேரட், உருளை,தக்காளி) - 50 கிலோ. புளி - 60 கிலோ. ‘’
அன்னமே பிரம்மம் என்னும் உபநிஷத மந்திரத்தை எண்ணிக் கொண்டேன்.
வன்னி
இந்திய மண்ணில் மரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்பது மிக ஆழமானது. பல்லாயிரம் ஆண்டு கால பாரம்பர்யம் கொண்டது. இந்தியப் பண்பாடு என்பதே இங்கே வாழ்ந்த குடிகள் உருவாக்கி பேணிய இவ்வாறான நுண்ணுணர்வுகளின் தொகுப்பே ஆகும். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீரம் வரை நதிகளை தெய்வமாக வணங்கும் வழக்கம் இருக்கிறது. பல இந்தியக் குடும்பங்கள் காலை எழுந்ததும் ‘’ கங்கை யமுனை கோதாவரி நர்மதை சரஸ்வதி சிந்து காவேரி’’ என இந்திய மண்ணின் நதிகளின் பெயர்களை உச்சரிக்கின்றன. இந்தியா இன்றும் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட நாடு என்பதால் அந்த கண்ணி முற்றிலும் அறுபடாமல் நிலைத்திருக்கிறது. தொல் படிமங்கள் தலைமுறைகளின் ஆழ்மனதில் பல்வேறு விதமான சடங்குகளின் வழியாக வழிபாட்டு முறைகளின் வழியாக நிலைபெறுகின்றன. ஆடிப்பெருக்கு பண்டிகையின் அன்று காவிரியின் படித்துறைகளைக் காண்பவர்களால் அதனை உணர்ந்து கொள்ள முடியும். படித்துறையில் பெரும்பாலும் இருக்கும் வினாயகர் ஆலயங்களில் பூசனைகள் செய்து பெண்கள் மஞ்சள் கயிறை கழுத்திலும் கையிலும் கட்டிக் கொள்வார்கள். கயிறைக் கட்டிக் கொள்ளும் போது மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் காவிரியைத் தம் அன்னையாக எண்ணும் அவர்களுடைய உணர்வு சிலிர்க்கச் செய்வது.